Home Tamil பங்களாதேஷ் இளையோரிடம் படுதோல்வியடைந்த இலங்கை 

பங்களாதேஷ் இளையோரிடம் படுதோல்வியடைந்த இலங்கை 

84

சுற்றுலா இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்திருக்கும் மூன்றாவது இளையோர் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.

முன்னதாக நடைபெற்ற பங்களாதேஷ் – இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணிகள் இடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை (11) இடம்பெற்ற இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் தரப்பு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி குல்னா நகரில் இன்று (14) ஆரம்பமானது.

ஷமிம், தவ்ஹீத் அதிரடியோடு பங்களாதேஷ் இளம் அணிக்கு வெற்றி

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி….

இரண்டு இளையோர் அணிகளும் வெற்றியினை எதிர்பார்த்து விளையாடிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளம் அணி பங்களாதேஷ் வீரர்களை முதலில் துடுப்பாட பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் இளம் தரப்பிற்கு தவ்ஹீத் தனது அதிரடிச் சதம் மூலம் ஓட்டங்கள் அதிகரிக்க உதவினார். இதேவேளை தன்ஸித் ஹஸன், மஹ்முதுல் ஹஸன் ஜோய் மற்றும் அணித்தலைவர் அக்பர் அலி ஆகியோரும் அரைச்சதங்கள் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களைக் குவித்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக கடந்த போட்டியிலும் அரைச்சதம் விளாசிய தவ்ஹீத் ரித்தோய் இப்போட்டியில் தனது அதிரடி சதத்தோடு 98 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 128 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம் தன்ஸித் ஹஸன் 60 ஓட்டங்கள் பெற, அக்பர் அலி மற்றும் மஹ்முதுல் ஹஸன் ஜோய் ஆகியோர் தலா 52 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர்.

இலங்கை இளம் வீரர்களின் பந்துவீச்சு சார்பாக கவிந்து நதீஷான் மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 341 ஓட்டங்களை பதிலுக்கு அடைய தமது துடுப்பாட்டத்தை இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி ஆரம்பம் செய்தது.

பின்னர் மிகவும் கடின இலக்காக இருந்த வெற்றி இலக்கினை அடைவதில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காண்பித்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி 31.2 ஓவர்களில் 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படு தோல்வியடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டிய நவோத் பரணவிதான 50 ஓட்டங்கள் பெற, பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியின் வெற்றியினை சொரிபுல் இஸ்லாம் மற்றும் தன்ஸிட் ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து உறுதி செய்திருந்தனர்.

மக்கள் எண்ணுவதும், எனது வாழ்க்கையும் வித்தியாசமானது – தனுஷ்க குணத்திலக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர்களில்….

போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் தரப்பின் தவ்ஹீத் ரித்தோய் தெரிவானார்.

இப்போட்டியின் வெற்றியோடு பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி 5 போட்டிகள் இளையோர் ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

அடுத்ததாக இவ்விரண்டு அணிகளும் மோதும் இளையோர் ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (17), மூன்றாவது ஒருநாள் போட்டி இடம்பெற்ற இதே குல்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka U19
179/10 (31.2)

Bangladesh U19
340/7 (50)

Batsmen R B 4s 6s SR
Tanzid Hasan b Chamindu Wijesinghe 60 53 5 1 113.21
Parvez Hossain b Amshi De Silva 1 9 0 0 11.11
Mahmudul Hasan lbw b Kavindu Nadeeshan 52 64 3 1 81.25
Tawhid Hridoy not out 123 98 8 6 125.51
Shahadat Hossain c Chamindu Wijesinghe b Kavindu Nadeeshan 6 17 0 0 35.29
Akbar Ali b Dilshan Madusanka 52 43 5 1 120.93
Shamim Hossain run out (Chamindu Wijesinghe) 21 18 1 1 116.67
Avishek Das lbw b Dilshan Madusanka 6 3 0 1 200.00
Rakibul Hasan not out 1 1 0 0 100.00


Extras 18 (b 0 , lb 2 , nb 6, w 10, pen 0)
Total 340/7 (50 Overs, RR: 6.8)
Fall of Wickets 1-17 (3.6) Parvez Hossain, 2-96 (16.6) Tanzid Hasan, 3-142 (23.3) Mahmudul Hasan, 4-155 (27.1) Shahadat Hossain, 5-262 (41.6) Akbar Ali, 6-309 (47.6) Shamim Hossain, 7-316 (48.4) Avishek Das,

Bowling O M R W Econ
Dilshan Madusanka 10 1 65 2 6.50
Amshi De Silva 10 0 78 1 7.80
Chamindu Wijesinghe 9 0 60 1 6.67
Avishka Tharindu 1 0 12 0 12.00
Rohan Sanjaya 10 0 57 0 5.70
Kavindu Nadeeshan 10 0 66 2 6.60


Batsmen R B 4s 6s SR
Mohammad Samaaz c Akbar Ali b Shoriful Islam 29 16 3 2 181.25
Navod Paranavithana c Akbar Ali b Shoriful Islam 50 32 9 0 156.25
Ravindu De Silva c Shahadat Hossain b Shamim Hossain 5 3 1 0 166.67
Nipun Dananjaya c Akbar Ali b Tanzid Hasan 5 13 0 0 38.46
Sonal Dinusha b Tanzid Hasan 7 4 0 1 175.00
Avishka Tharindu b Rakibul Hasan 30 32 2 1 93.75
Chamindu Wijesinghe c Akbar Ali b Avishek Das 14 20 1 0 70.00
Rohan Sanjaya run out (Avishek Das) 3 12 0 0 25.00
Kavindu Nadeeshan run out (Shahadat Hossain) 2 8 0 0 25.00
Amshi De Silva c Akbar Ali b Shahadat Hossain 7 25 1 0 28.00
Dilshan Madusanka not out 12 23 2 0 52.17


Extras 15 (b 0 , lb 2 , nb 0, w 13, pen 0)
Total 179/10 (31.2 Overs, RR: 5.71)
Fall of Wickets 1-64 (5.5) Mohammad Samaaz, 2-71 (6.4) Ravindu De Silva, 3-93 (9.6) Navod Paranavithana, 4-102 (11.1) Nipun Dananjaya, 5-104 (11.4) Sonal Dinusha, 6-131 (16.3) Chamindu Wijesinghe, 7-141 (19.3) Rohan Sanjaya, 8-158 (23.1) Kavindu Nadeeshan, 9-158 (23.2) Avishka Tharindu, 10-179 (31.2) Amshi De Silva,

Bowling O M R W Econ
Shoriful Islam 7 1 50 2 7.14
Tanzid Hasan 6 0 46 2 7.67
Shamim Hossain 7 0 35 1 5.00
Avishek Das 4 0 21 1 5.25
Rakibul Hasan 6 1 17 1 2.83
Shahadat Hossain 1.2 0 8 1 6.67



முடிவு – பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 161 ஓட்டங்களால் வெற்றி 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க