இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது!

100
 
இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள இந்த குழாத்தின் படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், சுமார் 18 மாதங்களுக்கு பின்னர், இலங்கை T20I குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை

நாம் பிரியாவிடை கொடுத்த 2019 ஆம் ஆண்டு இலங்கை ……….

இறுதியாக, இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு T20I தொடரில் விளையாடியிருந்ததுடன், தொடரை முழுமையாக இழந்திருந்தது. இவ்வாறான நிலையில், குறித்த தொடருக்கான குழாத்திலிருந்து இரண்டு மாற்றங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய தொடரில் இணைக்கப்பட்டிருந்த செஹான் ஜயசூரிய மற்றும் நுவான் பிரதீப் ஆகியோருக்கு பதிலாக அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் மீண்டும் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான நுவான் பிரதீப், கடந்த வாரம் இடம்பெற்ற பயிற்சியின் போது, கணுக்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளமையால் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவரது இடத்தை கசுன் ராஜித நிரப்பவுள்ளார்.

அதேநேரம், செஹான் ஜயசூரிய, பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் பிரகாசித்திருந்தாலும், அவரது இடத்துக்கு சிறந்த சகலதுறை வீரராக வளர்ந்து வரும் தனன்ஜய டி சில்வா இணைக்கப்பட்டுள்ளார்.

விராட் கோஹ்லியின் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்வதற்கான இலங்கை அணியின் 16 பேர்கொண்ட குழாத்துக்கு லசித் மாலிங்க தலைவராக செயற்படவுள்ளார். 

இலங்கை இராணுவத்தில் மேஜரானார் திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான ………..

குறிப்பாக, இந்த வருடத்தில் இவரின் தலைமையில் இலங்கை அணி ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றுள்ளதுடன், 9 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால், அவருடைய தலைமைத்துவத்தையும் இந்த தொடரில் அவதானிக்க வேண்டிய அவசியம் இலங்கை அணிக்கு எழுந்துள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, வேகப் பந்துவீச்சாளர்களாக மாலிங்க, இசுரு உதான, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் செயற்படவுள்ளதுடன், சுழல் பந்துவீச்சாளர்களாக வனிந்து ஹசரங்க மற்றும் லக்ஷான் சந்தகன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் தனுஷ்க குணதிலக்க மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர்களாக செயற்படவுள்ளதுடன், மிதவேக பந்துவீச்சாளராக மெதிவ்ஸ் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் செயற்படவுள்ளனர்.

விராட் கோஹ்லியின் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்வதற்கான இலங்கை அணியின் 16 பேர்கொண்ட குழாத்துக்கு லசித் மாலிங்க தலைவராக செயற்படவுள்ளார். 

குறிப்பாக, இந்த வருடத்தில் இவரின் தலைமையில் இலங்கை அணி ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றுள்ளதுடன், 9 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால், அவருடைய தலைமைத்துவத்தையும் இந்த தொடரில் அவதானிக்க வேண்டிய அவசியம் இலங்கை அணிக்கு எழுந்துள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, வேகப் பந்துவீச்சாளர்களாக மாலிங்க, இசுரு உதான, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் செயற்படவுள்ளதுடன், சுழல் பந்துவீச்சாளர்களாக வனிந்து ஹசரங்க மற்றும் லக்ஷான் சந்தகன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் தனுஷ்க குணதிலக்க மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர்களாக செயற்படவுள்ளதுடன், மிதவேக பந்துவீச்சாளராக மெதிவ்ஸ் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் செயற்படவுள்ளனர்.

துடுப்பாட்ட வரிசையை பார்க்கும் போது, மெதிவ்ஸின் வருகை அணிக்கு பலம் அளிக்கும் என்பதுடன், ஓசத பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது. இதில் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு இறுதி பதினொருவரில் இடம்பிடிப்பதற்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. 

திசர பெரேராவின் தலைமையிலான இலங்கை அணி கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு T20I தொடரில் விளையாடியதுடன், குறித்த தொடரை 3-0 என இழந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழாம்

லசித் மாலிங்க (தலைவர்), குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, ஓசத பெர்னாண்டோ, தசுன் ஷானக, அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், தனன்ஜய டி சில்வா, லஹிரு குமார, இசுரு உதான, கசுன் ராஜித

போட்டி அட்டவணை

  • முதல் T20I – ஜனவரி 5 (கவாஹ்டி)
  • இரண்டாவது T20I – ஜனவரி 7 (இந்தூர்)
  • மூன்றாவது T20I – ஜனவரி 9 (பூனே)

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<