பல்கலைக்கழக கிரிக்கெட் இறுதி மோதலில் யாழ், ஸ்ரீ ஜயவர்தனபுர அணிகள்

159

இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு இடையே 13ஆவது தடவையாக நடைபெறும் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாக இடம்பெறும் ஒருநாள் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணிகள் தெரிவாகியுள்ளன. 

இந்த கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்றும் (24), இன்றும் (25) நடைபெற்றிருந்தன.   

  • முதல் அரையிறுதி 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எதிர் தென் கிழக்கு பல்கலைக்கழகம்

காலிறுதிப் போட்டிகளில் கொழும்பு பல்கலைக்கழக அணியினை யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி தோற்கடித்தும், களனிப் பல்கலைக்கழக அணியினை தென் கிழக்கு பல்கலைக்கழக அணி தோற்கடித்தும் இந்த அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.  

யாழ் பல்கலைக்கழக அணிக்கு தொடர்ந்து இரண்டாவது வெற்றி

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு…………

ரஜரட்ட பல்கலைக்கழக மைதானத்தில் தொடங்கியிருந்த முதல் அரையிறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென் கிழக்கு பல்கலைக்கழக அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

அந்தவகையில் முதலில் துடுப்பாடிய தென் கிழக்கு பல்கலைக்கழக அணியினர் யாழ். பல்கலைக்கழக அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். தென் கிழக்கு பல்கலைக்கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் HSCN சந்திரசிறி 30 ஓட்டங்களை குவித்திருக்க, TR. பாலசூரிய 28 ஓட்டங்களை பெற்றிருந்தார். 

இதேநேரம், யாழ் பல்கலைக்கழக அணியின் பந்தவீச்சு சார்பாக RADM. பண்டார மற்றும் லஹதீஸ்வர் ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 126 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி, குறித்த வெற்றி இலக்கினை கல்கஹோகனின் அதிரடியோடு வெறும் 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களுடன் அடைந்தது. 

Photos : 13th Sri Lanka University Games – Cricket | University of Peradeniya Vs University of Jaffna

ThePapare.com | Murugaiah Saravanan| 08/08/2019 Editing and re-using images…………..

யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியின் வெற்றிக்காக கல்கஹோகன் அரைச்சதம் பூர்த்தி செய்து வெறும் 28 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதற்கு முன்னர் இந்த தொடரில் கட்புலஅரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இவர் சதம் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், தென்கிழக்கு பல்கலைக்கழக அணியின் பந்துவீச்சு சார்பில் PTR. பத்திரன 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.   

இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 13ஆவது பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக தம்மைப் பதிவு செய்துகொண்டது. 

போட்டியின் சுருக்கம் 

தென் கிழக்கு பல்கலைக்கழகம் – 125 (47.3) HSCN. சந்திரசிறி 30, TR. பாலசூரிய 28, RADM. பண்டார 25/3, லஹதீஸ்வர் 27/3
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் – 128/2 (18.2) கல்கஹோகன் 54, PTR. பத்திரன 22/2

முடிவு – யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி 


  • இரண்டாவது அரையிறுதிப் போட்டி 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்பலைக்கழகம் எதிர் ரஜரட்ட பல்கலைக்கழகம் 

இதற்கு முன்னைய காலிறுதிப் போட்டியில் மொரட்டுவ பல்கலைக்கழக அணியினை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி வீழ்த்தியிருந்ததுடன், பேராதனை பல்கலைக்கழக அணியினை ரஜரட்ட பல்கலைக்கழக அணி வெற்றிகொண்டிருந்தது. 

ஆறாம் இலக்கத்தை நிரந்தரமாக கொடுத்தால் ஓட்டங்களைக் குவிப்பேன் – தனஞ்சய டி சில்வா

இலங்கை டெஸ்ட் அணிக்காக தொடர்ந்து………..

மொரட்டுவை பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால் ஆட்டம் இரண்டு நாட்களில் (24, 25) நடைபெற்றிருந்தது. போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர். 

எனினும், பதிலுக்கு துடுப்பாடிய ரஜரட்ட பல்கலைக்கழக அணியினர் 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் 93 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தனர். 

இந்த வெற்றியுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியினர், 13ஆவது பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர். 

போட்டியின் சுருக்கம்  

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் – 190/9 (50 ஓவர்கள்)
ரஜரட்ட பல்கலைக்கழகம் – 97 (41.5 ஓவர்கள்) 

முடிவு – சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 93 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<