Home Tamil முதல் நாள் துடுப்பாட்டத்தோடு செலுத்தியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

முதல் நாள் துடுப்பாட்டத்தோடு செலுத்தியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

36

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது குசல் மெண்டிஸ், நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரட்ன ஆகியோரது அரைச்சதங்களோடு வலுப் பெற்றிருக்கின்றது.

>>அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கை U19 மகளிர் கிரிக்கெட் அணி

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது முன்னதாக சட்டோக்ரமில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் தனன்ஞய டி சில்வா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என ஏற்கனவே முன்னிலை பெற்றிருக்க இலங்கை இப்போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியிருந்தது. அதன்படி உபாதைக்குள்ளான கசுன் ராஜிதவிற்குப் பதிலாக அசித பெர்னாண்டோ இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரட்ன ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தனர். இந்த வீரர்களும் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 96 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் நிஷான் மதுஷ்க 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இது அவரின் இரண்டாவது அரைச்சதமாகவும் மாறியது.

அதன் பின்னர் முதல் நாள் மதிய போசணம் வரை திமுத் கருணாரட்ன தன்னுடைய 37ஆவது அரைச்சதத்தோடு இலங்கைத் தரப்பினை பலப்படுத்திய நிலையில் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார். திமுத் கருணாரட்ன ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் எடுத்தார்.

>>புதிய வீரர்களை உள்வாங்கும் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள்

தொடர்ந்த ஆட்டத்தில் இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் பெறுமதி சேர்த்தார். பொறுப்பாக ஆடிய அவர் தன்னுடைய 18ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு சதத்தினை நோக்கி முன்னேறிய நிலையில்  ஆட்டமிழந்தார்.

குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது ஒரு சிக்ஸர் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இந்த மூன்று வீரர்களது ஆட்டத்தோடும் இலங்கை அணியானது முதல் நாள் ஆட்டநிறைவில் முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்று காணப்படுகின்றது.

களத்தில் ஆட்டமிழக்காது காணப்படும் தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களோடும், தனன்ஞய டி சில்வா 15 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் ஹசன் மஹ்மூட் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
178/10 (68.4) & 318/9 (85)

Sri Lanka
531/10 (159) & 157/7 (40)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka run out (Liton Das) 57 105 6 0 54.29
Dimuth Karunaratne b Hasan Mahmud 86 129 8 1 66.67
Kusal Mendis c Mehidy Hasan Miraz b Shakib Al Hasan 93 150 11 1 62.00
Angelo Mathews c Mehidy Hasan Miraz b Hasan Mahmud 23 71 2 1 32.39
Dinesh Chandimal c Liton Das b Shakib Al Hasan 59 104 5 2 56.73
Dhananjaya de Silva lbw b Khaled Ahmed 70 111 6 2 63.06
Kamindu Mendis not out 92 167 7 2 55.09
Prabath Jayasuriya lbw b Shakib Al Hasan 28 75 3 0 37.33
Vishwa Fernando run out (Najmul Hossain Shanto) 11 26 2 0 42.31
Lahiru Kumara b Mehidy Hasan Miraz 6 12 1 0 50.00
Asitha Fernando run out (Taijul Islam) 0 4 0 0 0.00


Extras 6 (b 4 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 531/10 (159 Overs, RR: 3.34)
Bowling O M R W Econ
Khaled Ahmed 20 2 72 1 3.60
Hasan Mahmud 24 5 99 2 4.12
Shakib Al Hasan 37 4 110 3 2.97
Mehidy Hasan Miraz 46 5 146 1 3.17
Taijul Islam 32 5 106 0 3.31
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Lahiru Kumara 21 42 3 0 50.00
Zakir Hasan b Vishwa Fernando 54 104 8 0 51.92
Taijul Islam b Vishwa Fernando 22 61 1 0 36.07
Najmul Hossain Shanto c Dimuth Karunaratne b Prabath Jayasuriya 1 11 0 0 9.09
Mominul Haque lbw b Asitha Fernando 33 84 3 0 39.29
Shakib Al Hasan lbw b Asitha Fernando 15 23 1 0 65.22
Liton Das c Kusal Mendis b Asitha Fernando 4 3 1 0 133.33
Shahadat Hossain c Kamindu Mendis b Lahiru Kumara 8 36 1 0 22.22
Mehidy Hasan Miraz lbw b Prabath Jayasuriya 7 31 0 0 22.58
Khaled Ahmed b Asitha Fernando 1 11 0 0 9.09
Hasan Mahmud not out 2 7 0 0 28.57


Extras 10 (b 4 , lb 4 , nb 1, w 1, pen 0)
Total 178/10 (68.4 Overs, RR: 2.59)
Bowling O M R W Econ
Vishwa Fernando 16 5 38 2 2.38
Asitha Fernando 10.4 1 34 4 3.27
Lahiru Kumara 11 5 19 2 1.73
Prabath Jayasuriya 24 4 65 2 2.71
Dhananjaya de Silva 7 2 14 0 2.00
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne b Hasan Mahmud 4 5 1 0 80.00
Nishan Madushka c Mehidy Hasan Miraz b Hasan Mahmud 34 45 5 0 75.56
Kusal Mendis b Khaled Ahmed 2 2 0 0 100.00
Angelo Mathews b Shakib Al Hasan 56 74 5 0 75.68
Dinesh Chandimal c Shahadat Hossain b Hasan Mahmud 9 7 2 0 128.57
Dhananjaya de Silva c Liton Das b Hasan Mahmud 1 7 0 0 14.29
Kamindu Mendis c Liton Das b Khaled Ahmed 9 17 2 0 52.94
Prabath Jayasuriya not out 28 67 2 0 41.79
Vishwa Fernando not out 8 16 1 0 50.00


Extras 6 (b 5 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 157/7 (40 Overs, RR: 3.92)
Bowling O M R W Econ
Khaled Ahmed 11 2 34 2 3.09
Hasan Mahmud 15 2 65 4 4.33
Shakib Al Hasan 10 0 39 1 3.90
Taijul Islam 4 0 13 0 3.25


Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Prabath Jayasuriya 24 32 3 0 75.00
Zakir Hasan c Dhananjaya de Silva b Vishwa Fernando 19 39 2 0 48.72
Najmul Hossain Shanto b Lahiru Kumara 20 55 2 0 36.36
Mominul Haque c Lahiru Kumara b Prabath Jayasuriya 50 56 8 1 89.29
Shakib Al Hasan c Nishan Madushka b Kamindu Mendis 36 53 3 0 67.92
Liton Das c Kusal Mendis b Lahiru Kumara 38 72 4 0 52.78
Shahadat Hossain lbw b Kamindu Mendis 15 34 2 0 44.12
Mehidy Hasan Miraz not out 81 110 14 0 73.64
Taijul Islam c Nishan Madushka b Kamindu Mendis 14 28 2 0 50.00
Hasan Mahmud not out 6 25 1 0 24.00
Khaled Ahmed b Lahiru Kumara 2 8 0 0 25.00


Extras 13 (b 9 , lb 2 , nb 2, w 0, pen 0)
Total 318/9 (85 Overs, RR: 3.74)
Bowling O M R W Econ
Vishwa Fernando 10 0 39 1 3.90
Asitha Fernando 15 2 62 0 4.13
Lahiru Kumara 15 3 50 4 3.33
Prabath Jayasuriya 27 2 99 2 3.67
Dhananjaya de Silva 8 2 25 0 3.12
Kamindu Mendis 10 0 32 3 3.20



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<