புதிய வீரர்களை உள்வாங்கும் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள்

150

இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் புதிய வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜிதவிற்கு ஓய்வு

அந்தவகையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியானது உபாதைக்குள்ளான சுழல்பந்துவீச்சாளரான முஜிபுர் ரஹ்மானிற்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணியின் அல்லா ஹ(G)சான்பாரிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது.

சுழல்பந்துவீச்சாளரான அல்லா ஹ(G)சான்பார் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார்.

அதேவேளை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது தசை உபாதைக்குள்ளான தமது முன்னணி வீரர் பிரசித் கிருஷ்னாவிற்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் முன்னணி சுழல் வீரரான கேவ் மஹராஜிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது.

இவை தவிர கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஜேசன் ரோயிற்குப் பதிலாக பில் சோல்டினையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அடம் ஷம்பாவிற்குப் பதிலாக தனுஷ் கோட்டியனையும் உள்வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<