Home Tamil மெதிவ்ஸின் சதத்தோடு முதல் நாளில் வலுப்பெற்றுள்ள இலங்கை

மெதிவ்ஸின் சதத்தோடு முதல் நாளில் வலுப்பெற்றுள்ள இலங்கை

173

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் நிறைவில், இலங்கை அணி அஞ்சலோ மெதிவ்ஸின் அபார சதத்தோடு வலுப் பெற்றிருக்கின்றது.

>> விபத்தில் உயிரிழந்த ஆஸி. கிரிக்கெட் நட்சத்திரம்

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடங்குகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (15) சட்டோக்ரம் நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தது.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் உபாதை காரணமாக இலங்கையின் கடைசி டெஸ்ட் தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட சகலதுறைவீரர் ரமேஷ் மெண்டிஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட துடுப்பாட்டவீரரான ஓசத பெர்னாண்டோவும் அணியில் நீண்ட இடைவேளையின் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.

இலங்கை அணி – திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, லசித் எம்புல்தெனிய, விஷ்வ பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால், மஹ்முதுல் ஹஸன் ஜோய், நஜ்முல் ஹொசைன் சான்டோ, முஷ்பிகுர் ரஹீம், மொமினுல் ஹக் (தலைவர்),

லிடன் தாஸ், சகீப் அல் ஹசன், தய்ஜுல் இஸ்லாம், நயீம் ஹஸன், சொரிபுல் இஸ்லாம், காலேத் அஹ்மட்

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களாக அணித்தலைவர் திமுத் கருணாரட்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் களம் வந்தனர். எனினும், போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே திமுத் கருணாரட்ன துரதிஷ்டவசமான LBW ஒன்றில் தனது விக்கெட்டினை வெறும் 09 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் நயீம் ஹஸனின் சுழலுக்கு பறிகொடுத்திருந்தார்.

எனினும் மறுமுனையில் ஓசத பெர்னாண்டோ சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்ததோடு, இரண்டாம் விக்கெட்டுக்காக நல்லதொரு இணைப்பாட்டத்தினை புதிய துடுப்பாட்டவீரராக களம் வந்த குசல் மெண்டிஸ் உடன் இணைந்து பெற்றார். பின்னர், 36 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவரின் விக்கெட் பறிபோனது.

முதல் நாளில் ஹெம்ஷையர் அணிக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்

தொடர்ந்து இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ், தன்னுடைய 13ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 92 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார். தய்ஜூல் இஸ்லாமின் சுழலில் வீழ்ந்த குசல் மெண்டிஸ் 3 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து புதிய துடுப்பாட்டவீரராக வந்த தனன்ஞய டி சில்வா ஜொலிக்காத போதும் அஞ்சலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமாலுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போட்டிருப்பதோடு, மெதிவ்ஸ் இப்போட்டியில் தன்னுடைய 12ஆவது டெஸ்ட் சதத்தினையும் பதிவு செய்திருந்தார்.

அஞ்சலோ மெதிவ்ஸின் அபார சதத்தோடு போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணி 90 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 258 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

இதேவேளை முதல் நாள் ஆட்டநிறைவில் ஆட்டமிழக்காது களத்தில் நிற்கும் அஞ்சலோ மெதிவ்ஸ் 114 ஓட்டங்களுடன் காணப்பட, தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் முதல் நாளில் நயீம் ஹஸன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்க, தய்ஜூல் இஸ்லாம் மற்றும் சகீப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<