விபத்தில் உயிரிழந்த ஆஸி. கிரிக்கெட் நட்சத்திரம்

487
Andrew Symonds

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறைவீரரான அன்ட்ரூ சைமன்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

>> முதல் நாளில் ஹெம்ஷையர் அணிக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்

அதன்படி 46 வயதாகும் சைமன்ட்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வசித்து வந்த டவுன்ஸ்வில்லே (Townsville) நகரிற்கு வெளியே சனிக்கிழமை (14) இடம்பெற்ற கோர கார் விபத்திலேயே உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகமான Fox செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கின்றது.

விபத்து ஏற்பட்டதன் பின்னர் அவசர மருத்துவ சேவைப் பிரிவானது அன்ட்ரூ சைமன்ட்ஸ் இணை காப்பற்ற முயற்சித்திருந்த போதும், அவருக்கு ஏற்பட்டிருந்த காயங்கள் மூலம் அவர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கதாநாயகர்களான ஷேன் வோர்ன், ரோட் மார்ஷ் ஆகியோரின் இறப்பிற்கு பின், மூன்றாவதாக அன்ட்ரூ சைமன்ட்ஸின் இறப்பும் சம்பவித்துள்ள நிலையில் இந்த நிகழ்வு அவுஸ்திரேலிய கிரிக்கெட் இரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கின்றது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள் அடங்கலாக, 198 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அன்ட்ரூ சைமன்ட்ஸ் அவுஸ்திரேலியா வென்ற இரண்டு (2003, 2007) கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர்களுக்கான அணிகளிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

>> IPL தொடரின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹஸரங்கவுக்கு முதலிடம்

இன்னும் அன்ட்ரூ சைமன்ட்ஸ் கென்ட், குளோகெஸ்டர்சைர், லங்கஷைர் மற்றும் சர்ரேய் அணிகளுக்காக கவுண்டி போட்டித் தொடர்களில் பங்கேற்ற வீரராகவும் காணப்பட்டிருந்தார்.

அதேநேரம் அன்ட்ரூ சைமன்ட்ஸ் இன் மரணச் செய்தியானது உலகெங்கிலும் இருக்கின்ற கிரிக்கெட் இரசிகர்களுக்கும் கவலை தரும் விடயமாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<