உலக கனிஷ்ட மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் சோபிக்கத் தவறிய இலங்கை அஞ்சலோட்ட அணி

138

டென்மார்க்கின் தம்பரே நகரில் இடம்பெற்ற உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் சுவட்டு நிகழ்ச்சியான 4×400 மீற்றர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் முதற்தடவையாக பங்கேற்ற இலங்கையின் 20 வயதின் கீழ்ப்பட்ட அஞ்சலோட்ட அணி எட்டாம் இடத்தை பெற்றிருக்கின்றது.  

IAAF உலக சம்பியன்ஷிப் போட்டியில் பாரமி தேசிய சாதனை

இலங்கையின் இரு கனிஷ்ட தடகள வீராங்கனைகளான…

158 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,500 இற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபெறும் இந்த உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 4×400 மீற்றர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில், இத் தொடரில் முதல் வெள்ளிப் பதக்கத்தினை வெல்லும் கனவோடு இலங்கையின் அஞ்சலோட்ட அணியை பிரதிநிதித்துவம் செய்து பசிந்து கொடிகார, பப்சார நிக்கு, ரவிஷ்க இந்திரஜித் மற்றும் அருண தர்ஷன ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

முன்னர் இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் 03:08.88 என்ற காலப்பதிவினை காட்டி  அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை அடுத்து மூன்றாம் இடத்தினைப் பெற்ற நிலையிலேயே உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அஞ்சலோட்ட இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியிருந்தது.

எனினும், இந்த தகுதிகாண் போட்டிகளின் மூலம் நேரடியாக இறுதிப் போட்டிக்கு பங்குபெறும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கவில்லை. இலங்கையின் அஞ்சலோட்ட அணி குறித்த  தகுதிகாண் போட்டியில் குறைந்த காலப்பதிவை காட்டி தோல்வியடைந்த இரண்டு அஞ்சலோட்ட அணிகளில் ஒன்றாக வந்த காரணத்தினாலேயே இறுதிப் போட்டியில் பங்கெடுக்கின்ற வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருந்தது. இந்த தகுதிகாண் போட்டியில் இலங்கையின் அஞ்சலோட்ட அணி காட்டிய காலப்பதிவு அவர்களது இந்த பருவகாலத்தின் சிறந்த காலப்பதிவான 03:08.21 விடவும் குறைவானதாகும்.

உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அருண, அமாஷா அரையிறுதிக்கு தகுதி

பின்லாந்தின் தம்பரே நகரில் நடைபெற்றுவரும் 17ஆவது…

இலங்கை அணி, இறுதிப் போட்டியினை முதல் சுவட்டில் ஓடியிருந்தது. இலங்கையின் அஞ்சலோட்ட அணிக்காக பசிந்து கொடிகார கடினமான முறையில் முயற்சி செய்து சிறந்த துவக்கம் ஒன்றினை வழங்கியிருந்தார். முன்னர் நடைபெற்ற தகுதிகாண் போட்டியினை 03:05.57 என்ற காலப்பதிவுடன் முடித்த அமெரிக்கா இறுதிப் போட்டியில் தங்கம் வெல்லும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் அஞ்சல் கோலினை ஆரம்பத்தில் மாற்றும் போது மேற்கொண்ட தவறு ஒன்றின் காரணமாக இறுதிப் போட்டியில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும் என்கிற நிலை உருவாகியிருந்தது.

எனினும், இறுதிப் போட்டியில் இரண்டாவது அஞ்சல் கோலினை மாற்றுவது இலங்கை அணிக்கு அவ்வளவு வெற்றிகரமானதாக அமையவில்லை. இலங்கை அணிக்காக இரண்டாவது வீரராக கோலை எடுத்துச் சென்ற நிக்கு, தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவுஸ்திரேலிய அணி வீரர் அவரை தாண்டிச் சென்றார். நிக்குவிடம் இருந்து அஞ்சல் கோலினைப் பெற்றுக் கொண்ட ரவிஷ்க தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டது போன்று இறுதிப் போட்டியில் சிறப்பாக செயற்படத் தவறியிருந்தார்.

இதனால், அதிக அழுத்தங்களுடன் ஓட்டத்தை முடிக்கும் பொறுப்பு அருண தர்ஷனவுக்கு கிடைக்க, அவர் தன்னால் முடிந்தளவு சிறப்பாக செயற்பட்டு இறுதிப் போட்டியை 3:09.28 என்ற காலப்பதிவுடன் முடித்தார். எனினும் போட்டியில் இலங்கை தரப்பினரால் எட்டாம் இடத்தினையே பெற முடிந்தது.

உயிரிழந்த பின்னரும் கோல் பெற்ற கால்பந்து வீரர்

வெனிசுவேலா தேசிய இளையோர் புட்சால்..

இலங்கை அணி இறுதிப் போட்டியினை ஓடி முடித்த காலப்பதிவு இதற்கு முன்னர் இடம்பெற்ற தகுதிகாண் போட்டிகளின் காலப்பதிவு மற்றும் அவர்களது இந்த பருவகாலத்திற்கான சிறந்த காலப்பதிவு என்பவற்றை விட அதிக நேரமாக இருந்தது.

ஆரம்பத்தில் அஞ்சல் கோலினை மாற்றுவதில் அமெரிக்கா தவறு விட்டிருந்த காரணத்தினால், இறுதிப் போட்டியினை 03:04.05 என்ற காலப்பதிவுடன் முடித்த  இத்தாலி முதல் இடத்தினை பெற்று உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 4×400 மீற்றர் அஞ்சலோட்டத்தின் வெற்றியாளர்களாக மாறியதோடு, தவறு செய்த அமெரிக்கா 3:05.26 என்ற காலப்பதிவுடன் வெள்ளிப் பதக்கத்தினையும், இங்கிலாந்து 3:05.64 என்ற காலப்பதிவுடன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு இறுதிப் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியாவிட்டாலும், இலங்கையின் அஞ்சலோட்ட அணி மாத்திரமே இந்த உலக கனிஷ்ட மெய்வல்லுனரின் அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம் போன்ற அணிகளுடன் பங்கேற்ற ஒரே ஆசிய நாடாக  இருந்தது.

இலங்கையின் அஞ்சலோட்ட அணி இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தமது சக போட்டியாளர்கள் போன்று போதிய வசதிகள் இல்லாத நிலையிலையில் சிறு கால இடைவெளில் பெற்ற பயிற்சிகளின் மூலம்தான் தோல்வியினை சந்தித்திருக்கின்றது. இலங்கையில் (சுகததாஸ அரங்கில்) கடந்த மே மாதம் அமைக்கப்பட்ட செயற்கை ஓடுபாதையிலேயே பயிற்சிகளை மேற்கொண்ட இலங்கை அஞ்சலோட்ட அணி சிறந்த பயிற்சிகளுடன் இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டால், வருகின்ற நாட்களில் உலகின் எந்த நாட்டுக்கும் சவால் கொடுக்கின்ற ஒரு அஞ்சலோட்ட அணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.  

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<