Home Tamil இலகு வெற்றியுடன் T20 தொடரில் முன்னிலை அடைந்த இலங்கை வீரர்கள்

இலகு வெற்றியுடன் T20 தொடரில் முன்னிலை அடைந்த இலங்கை வீரர்கள்

New Zealand tour of Sri Lanka 2024 

128

சுற்றுலா நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில் இலங்கை வீரர்கள் நியூசிலாந்தினை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதோடு இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றனர்.  

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான “Hybrid” மாதிரியை பாகிஸ்தான் மறுக்கின்றதா?

தம்புள்ளையில் நேற்று (10) இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் T20I போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர் 

அதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து வீரர்கள் தடுமாற்றத்தினை எதிர்கொண்டதோடு 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஷேக்கரி போல்க்ஸ் 16 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடங்கலாக 27 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் எடுத்தார் 

இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க, நுவான் துஷார மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சுருட்டினர் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 136 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கை 19 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களுடன் அடைந்தனர் 

இலங்கைத்தரப்பின் வெற்றியினை உறுதி செய்த சரித் அசலன்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் அவருக்கு துணையாக இருந்த வனிந்து ஹஸரங்க 22 ஓட்டங்கள் பெற்றிருந்தார் 

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஷேக்கரி போல்க்ஸ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலன்க தெரிவானார் 

இலங்கைநியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது T20I போட்டி இன்று (10) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது 

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka
140/6 (19)

New Zealand
135/10 (19.3)

Batsmen R B 4s 6s SR
Tim Robinson b Dunith Wellalage 3 6 0 0 50.00
Will Young lbw b Maheesh Theekshana 19 19 1 1 100.00
Mark Chapman c Wanindu Hasaranga b Nuwan Thushara 1 6 0 0 16.67
Glenn Phillips lbw b Wanindu Hasaranga 13 13 1 0 100.00
Michael Bracewell c Kamindu Mendis b Nuwan Thushara 27 24 2 1 112.50
Mitchell Hay c Kusal Mendis b Matheesha Pathirana 0 2 0 0 0.00
Josh Clarkson c Kamindu Mendis b Matheesha Pathirana 3 6 0 0 50.00
Mitchell Santner st Kusal Mendis b Wanindu Hasaranga 16 16 2 0 100.00
Zakary Foulkes not out 27 16 1 1 168.75
Ish Sodhi c Charith Asalanka b Dunith Wellalage 10 9 1 0 111.11
Jacob Duffy c Kusal Mendis b Dunith Wellalage 0 1 0 0 0.00


Extras 16 (b 0 , lb 6 , nb 5, w 5, pen 0)
Total 135/10 (19.3 Overs, RR: 6.92)
Bowling O M R W Econ
Maheesh Theekshana 4 0 21 1 5.25
Nuwan Thushara 3 0 14 2 4.67
Dunith Wellalage 3.3 0 20 3 6.06
Wanindu Hasaranga 4 0 20 2 5.00
Charith Asalanka 2 0 25 0 12.50
Matheesha Pathirana 3 0 29 2 9.67


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Zakary Foulkes 19 14 2 1 135.71
Kusal Mendis lbw b Mitchell Santner 0 5 0 0 0.00
Kusal Perera lbw b Michael Bracewell 23 17 2 1 135.29
Kamindu Mendis c Ish Sodhi b Glenn Phillips 23 16 4 0 143.75
Charith Asalanka not out 35 28 1 2 125.00
Bhanuka Rajapakse c Mitchell Hay b Zakary Foulkes 4 4 1 0 100.00
Wanindu Hasaranga c Mitchell Santner b Zakary Foulkes 22 23 3 0 95.65
Dunith Wellalage not out 11 7 1 1 157.14


Extras 3 (b 0 , lb 1 , nb 0, w 2, pen 0)
Total 140/6 (19 Overs, RR: 7.37)
Bowling O M R W Econ
Jacob Duffy 4 0 29 0 7.25
Mitchell Santner 4 0 30 1 7.50
Michael Bracewell 4 0 31 1 7.75
Zakary Foulkes 3 0 20 3 6.67
Ish Sodhi 2 0 17 0 8.50
Glenn Phillips 2 0 12 1 6.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<