உயிரிழந்த பின்னரும் கோல் பெற்ற கால்பந்து வீரர்

389
Image Source - Twitter @GuerrerosdeLago

வெனிசுவேலா தேசிய இளையோர் புட்சால் அணியினர் மரணமடைந்த தமது சக வீரருக்கு கடைசியாக கோலொன்றை பெற வாய்ப்பு அளித்து அவருக்கு சோகத்துடன் விடைகொடுத்துள்ள சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது.

குரோஷியாவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ்

குரோஷிய அணியுடனான விறுவிறுப்பான இறுதிப்…

செட்வைன் இன்ட்ரியாகோ என்ற குறித்த கால்பந்து வீரர் கார் விபத்தொன்றில் உயிரிழந்தார். அவருக்கு கடைசியாக விடைகொடுக்க நினைத்த சக வீரர்கள் வித்தியாசமான முறையில் பிரியாவிடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.  

லிவ்ராமென்டோ என்ற அந்த கால்பந்து அணியினர் உயிரிழந்த தனது சக வீரரின் சவப்பெட்டியை நேராக புட்சால் மைதானத்திற்கு எடுத்து வந்தார்கள். பின்னர், அந்த சவப்பெட்டியை மைதானத்தின்  ஒரு பக்க கோலுக்கு அருகில் வைத்து கால்பந்து ஆட ஆரம்பித்தனர். இதன்போது ஒரு வீரர் பந்தை சவப்பெட்டியின் மீது உதைக்க, பந்து சவப்பெட்டியில் பட்டு துள்ளிச்சென்று வலைக்குள் நுழைந்து கோலாக மாறியது. இதன்மூலம் மரணத்திற்கு பின்னரும் கோல் பெற்றவராக அவர் பதிவானார்.   

பந்து வலைக்குள் சென்றபோது அந்த உணர்வுபூர்வமான இறுதிக் கிரியையை அரங்கு சூழ பார்த்திருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். சக வீரர்கள் இறுதி கோலை பெற்றதற்காக மரணித்த தனது சக வீரரை கண்ணீர் விட்டபடி சவப்பெட்டியை தட்டி பாராட்டுவதையும் தற்பொழுது வெளியாகியுள்ள குறித்த காணொளியில் மூலமாகப் பார்க்க முடிந்தது.   

இந்த உணர்வுபூர்வமான தருணம் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதை அடுத்து வெனிசுவேலா எங்குமிருந்து பலரும் அந்த உயிரிழந்த  வீரருக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<