மேஜர் T20 லீக்கில் அதிரடியை வெளிக்காட்டிய சதீர, சானக மற்றும் அவிஷ்க

730

இலங்கையில் உள்ள முன்னணி 24 கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் T20 லீக் தொடர் இன்று (15) ஆரம்பமாகியுள்ளது. இதில் இன்று காலை ஆரம்பித்த 6 போட்டிகளின் முடிவுகள் இதோ…

வீரர்களுடன் சேர்ந்து இலங்கை கிரிக்கெட்டை பாதுகாப்பதாக அர்ஜுன அறிவிப்பு

தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்புடன் விளையாடுகின்ற …

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

பனாகொடையில் நடைபெற்ற லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில், பதுரெலிய கிரிக்கெட் கழக அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லங்கன் கிரிக்கெட் கழக அணி 125/8 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பதுரெலிய அணி 18.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

போட்டி சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 125/8 (20), மதுரங்க சொய்ஷா 25, எஸ். கன்கனகே 25, நுவான் துஷார 22/3, அசங்க சில்வா 24/2

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 129/6 (18.2), ஷிரான் ரத்நாயக்க 24*, நதீர நாவெல 21, துலன்ஜன மெண்டிஸ் 17/4

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

சோனகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சதீர சமரவிக்ரமவின் அதிரடி சதத்தின் உதவியுடன் கோல்ட்ஸ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றது. சதீர சமரவிக்ரம 65 பந்துகளுக்கு ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கோல்ட்ஸ் அணி 198 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

Photos: Colts CC vs Police SC | Major T20 Tournament 2018/19

போட்டி சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 198/4 (20), சதீர சமரவிக்ரம 100* (65), அவிஷ்க பெர்னாண்டோ 63 (36), மஹேஷ் பிரியதர்சன 29/2

பொலிஸ் விளையாட்டு கழகம் – 159/10 (20), மஞ்சுல ஜயவர்தன 58 (36), மாலிங்க மலிகஸ்பே 35 (21), நிஷான் மதுசங்க 12/3

முடிவு – கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த மடவளை வேகப்புயல் சிராஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பின்னடைவுகளுக்கு …

என்.சி.சி கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டு கழகம்

பாணந்துறை விளையாட்டு கழகத்துக்கு எதிரான போட்டியை, அபார பந்து வீச்சின் மூலமாக என்.சி.சி. அணி வெற்றிக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய என்.சி.சி. அணி 142 ஓட்டங்களை பெற்றதுடன், பாணந்துறை அணியை 111 ஓட்டங்களுக்கு சுருட்டியது.

Photos: NCC v Panadura SC | Major T20 Tournament 2018/19

போட்டி சுருக்கம்

என்.சி.சி. கழகம் – 142/6 (20), மஹேல உடவத்த 45 (32), உபுல் தரங்க 33 (39), சரன நாணயக்கார 35/2

பாணந்துறை விளையாட்டு கழகம் – 111/10 (17.1), அஜித் குமார பஸ்நாயக்க 36 (23), மிஷென் சில்வா 24 (16), அஷித பெர்னாண்டோ 21/3, தினேஷ் குணரத்ன 28/3

முடிவு – என்.சி.சி. கழகம் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

றாகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில், இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. றாகம அணி நிர்ணயித்த 153 என்ற வெற்றியிலக்கை, 19.3 ஓவர்கள் நிறைவில் கடற்படை அணி கடந்து வெற்றிபெற்றது.

றாகம கிரிக்கெட் கழகம் – 152 (20), ஜனித் லியனகே 55 (39), இசான் ஜயரட்ன 28 (23), சதிக் நிமால்ஷ 28/4

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் – 155/6 (19.3), டிலான் சந்திம 44 (40), துஷான் ஹேமந்த 43 (30), இசான் ஜயரட்ன 16/2

முடிவு – கடற்படை விளையாட்டு கழகம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை விமானப் படை விளையாட்டு கழகம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டடியில், இலங்கை விமானப் படை அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. துறைமுக அதிகார சபை அணி நிர்ணயித்த 158 ஓட்டங்களை நோக்கிய விமானப்படை அணி 139 ஓட்டங்களுக்கு சுருண்டது.

Photos: Air Force SC vs SL Ports Authority SC | Major T20 Tournament 2018/19

இலங்கை துறைமுக அதிகாரசபை – 157/10 (20), யொஹான் சனுக 62 (43), கயான் மனீசன் 29 (20), உமேக சதுரங்க 40/4, சம்பத் பெரேரா 30/3

விமானப்படை விளையாட்டு கழகம் – 139/10 (19.3), ரவிந்து செம்புகுட்டிகே 50 (36), மிலான் ரத்நாயக்க 16 (12), ஹசான் விமர்ஷன 26/3, சரித் ஜயம்பதி 26/3

முடிவு – இலங்கை துறைமுக அதிகார சபை அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

நாங்கள் முன்னேறியே வந்திருக்கின்றோம்: சந்திக ஹதுருசிங்க

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள…

எஸ்.எஸ்.சி. எதிர் செரசென்ஸ் கிரிக்கெட் கழகம்

இந்த பருவகாலத்தின் முதல் சுப்பர் ஓவர் முடிவினைத் தந்த இந்தப் போட்டியில், எஸ்.எஸ்.சி. அணி வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது. போட்டியில் இரண்டு அணிகளும் 145 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள சுப்பர் ஓவரின் மூலம் எஸ்.எஸ்.சி. அணி வெற்றியை பெற்றுக்கொண்டது.

Photos: Saracens SC vs SSC | Major T20 Tournament 2018/19

எஸ்.எஸ்.சி. கழகம் – 145/10 (20), தசுன் சானக 64 (48), தரிந்து ரத்நாயக்க 25, எண்டி சொலமன் 14/3

செரசென்ஸ் கிரிக்கெட் கழகம் – 145/7 (20), நிபுன் கருணாநாயக்க 50 (45), நவிந்து விதானகே 37 (24), ஜெப்ரி வெண்டர்சே 18/2

முடிவு – எஸ்.எஸ்.சி. அணிக்கு சுப்பர் ஓவரால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<