வீரர்களுடன் சேர்ந்து இலங்கை கிரிக்கெட்டை பாதுகாப்பதாக அர்ஜுன அறிவிப்பு

589

தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்புடன் விளையாடுகின்ற ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட வீரர்களை மாத்திரம் இலங்கை அணியில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற, 1996 உலகக் கிண்ண சம்பியன் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டுக்காக விளையாடாத வீரர்களை அணியிலிருந்து நீக்குவேன் – அர்ஜுன

இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில்…

அத்துடன், இம்முறை தேர்தலில் வெற்றிபெற்றால் தான் வீரர்களுடன் இருந்து கிரிக்கெட்டை மாத்திரம் பாரத்துக் கொள்வதாகத் தெரிவித்த அவர், உலகக் கிண்ணத்திற்கு முன் சிறந்த அணியொன்றை கட்டியெழுப்பி இலங்கை அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணதுங்க தரப்பினரால் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (13) கொழும்பில் உள்ள நவலோக வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இதன்போது, தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில்இலங்கை கிரிக்கெட் சரியான பாதையில் கொண்டு செல்லல்என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட், பாடசாலை கிரிக்கெட், மாகாண மற்றும் மாவட்ட கிரிக்கெட் மற்றும் நிதி உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, ”நான் தேர்தலில் வெற்றிபெற்றால் தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்புடன் விளையாடுகின்ற வீரர்கள் மாத்திரம் இலங்கை அணியில் இணைத்துகொள்ள நடவடிக்கை எடுப்பேன். நாட்டுக்காக விளையாடுகின்ற வீரர்கள் மாத்திரமே எனக்குத் தேவை. 1996 உலகக் கிண்ண அணியை நான் தெரிவு செய்த போது யாரும் சிறந்த வீரர்களாக இருக்கவில்லை. மாறாக, நாட்டுக்காக உயிரையே கொடுக்கின்ற 13 பேருடன் தான் நான் மைதானத்துக்குச் சென்று விளையாடினேன். அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு இல்லாவிட்டால் ஒருநாளும் கிரிக்கெட் விளையாட்டில் முன்னேற முடியாது.

தற்போது இலங்கை அணியில் உள்ள வீரர்களிடம் திறமைகள் இல்லை என நான் கூறவில்லை. மாறாக, வேறு குறைபாடுகள்தான் அவர்களுக்கு உள்ளன. வீரர்கள் மைதானத்துக்குச் சென்று விளையாடுவதைப் பார்க்கும்போது அவர்களுக்கு பல பிரச்சினைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அடுத்த போட்டியில் விளையாட முடியுமா என்ற சந்தேகமும் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. நாங்கள் விளையாடிய காலத்தில் வீரர்களுக்கு அச்சமின்றி விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கினோம். அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தினோம். ஆனால், தற்போது அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, அணித் தலைவர்களுக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாது. இலங்கை கிரிக்கெட்டுக்கு திட்டம் எதுவும் கிடையாது. இதனால் நாளுக்குநாள் இலங்கை கிரிக்கெட் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அதேபோல, உலகக் கிண்ணத்தை வெல்வதென்பது இலகுவான விடயமல்ல. எனினும், இலங்கை அணியை இறுதிச் சுற்றுக்கு கொண்டுவருவதுதான் எனது எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது இலங்கை அணி விளையாடுவதைப் பார்க்கும்போது இலங்கை அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் வெற்றிபெறுமா? என்பது சந்தேகம் தான். அந்தளவுக்கு இலங்கை அணியின் நிலை மோசமாக உள்ளது.

எனவே, இந்த நாட்டின் கிரிக்கெட் விளையாட்டுக்கு நேர்ந்துள்ள நிலைமையைப் பொறுத்துக் கொள்ள முடியாத பலர் என்னை நிர்வாகத்துக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். இதன்காரணமாக இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். உண்மையில் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்குத்தான் நான் முன்வந்தேன். எனினும், இம்முறை தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு தேசிய கிரிக்கெட் அணி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி உலகக் கிண்ணத்திற்கு சிறந்த அணியொன்றை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளேன். இதற்கு முன்னாள் வீரர்கள் பலர் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் என்னிடம் வாக்குறுதி அளித்துள்ளனர்” என தெரிவித்தார்.

எனவே இலங்கை கிரிக்கெட்டை உயரிய இடத்துக்கு கொண்டு செல்வதற்கான பொறுப்பை என்னிடம் தாருங்கள். எமது தரப்பினர் சிறந்த முறையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்து நாட்டுக்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார்கள் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்தலில்…

இதுஇவ்வாறிருக்க, இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க கருத்து வெளியிடுகையில், நான் வீரர்களுடன் இருந்து கிரிக்கெட்டைப் பார்த்துக் கொள்கிறேன். ஏனையோர் நிர்வாக நடவடிக்கைகளில் இருப்பார்கள். கடந்த காலங்களில் வருடமொன்றுக்கு 40 வீரர்கள் அணியில் இடம்பிடித்திருந்தனர். தமக்கு ஆதரவு தெரிவித்த கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்கியிருந்தனர். நான் கப்பல் மற்றும் துறைமுக சேவைகள் அமைச்சராக இருந்தபோது துறைமுக அதிகார சபை கிரிக்கெட் அணிக்காக விளையாடி பல வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவதற்கு சி.சி.சி கழகத்துடன் இணைந்துகொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தனர். அவ்வாறு தெரிவித்துவிட்டுச் சென்ற வீரர், மூன்று மாதங்களுக்குப் பிறகு தேசிய அணிக்காக தேர்வாகியிருந்தார். ஏன் இலங்கையில் தான் கிரிக்கெட் ஊழல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து .சி.சியினால் விசேட அலுவலகம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது. சூதாட்டக்காரர்கள் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும்போது இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவது வழக்கம்.

.பி.எல் போட்டிகளால் எமது கிரிக்கெட் அழிவடைந்ததை இன்றும் நான் கூறுகிறேன். நானும் பல வீரர்களுடன் விளையாடியுள்ளேன். அவர்களை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளேன். வீரர்களுக்கு விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். என்னிடம் நல்ல பண்பு இருக்கின்றது. எவ்வாறு நிர்வாகம் செய்யவேண்டும் என நன்கு தெரிந்து வைத்துள்ளேன். அதிகாலை 2.00 மணிக்கு வீரர்களை மைதானத்துக்கு அழைத்துச் சென்று விளையாட வைப்பதற்கு நான் விரும்பமாட்டேன். அதேபோல, குடித்துவிட்டு வந்து விளையாடுவதற்கும் நான் விரும்பமாட்டேன். எனவே நான் நிர்வாகத்துக்கு வந்தால் இவையனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன் என்றார்.

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கவுள்ள ரணதுங்க தரப்பினர்

ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை…

இதேவேளை, இம்முறை தேர்தலை நேரலையாக ஒளிபரப்புச் செய்யும்படி நான் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறேன். அப்போது இலங்கை கிரிக்கெட்டை ஆதால பாதாளத்துக்கு கொண்டு சென்றவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும். கடந்தமுறை நான் தேர்தலில் களமிறங்கியபோது நான் விளையாடிய என்.சி.சி கழகத்தினால் எனக்கு வாக்களிக்க அனுமதி கொடுக்கவில்லை. எனவே, தேர்தலில் வாக்களிப்பது யார் என்பதை நன்கு தெரிந்துகொள்ள முடியும்.  

இதேநேரம், தற்போதுள்ள தேர்தல் முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, இம்முறை தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற புதிய தேர்தல் முறையை கட்டாயம் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரணதுங்க தரப்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஜயந்த தர்மதாச, கே. மதிவாணன், செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற நிஷாந்த ரணதுங்க, உப செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஹிரன்த பெரேரா, பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற ஈஸ்மன் நாரங்கொட மற்றும் உப பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகின்ற சன்ஜய சேதர உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<