கட்டாருடன் A குழுவில் இலங்கை 23 வயதின்கீழ் கால்பந்து அணி

414

உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான 23 வயதுக்குட்பட்ட ஆடவர் ஆசிய சம்மேளன கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி குழு A இல் இடம்பெற்றிருக்கின்றது. 

PSG அணியுடன் இணைகிறார் ராமோஸ்

அதன்படி, இந்த தகுதிகாண் தொடரில் மேற்கு பிராந்தியத்திற்குள் இணைக்கப்பட்டிருக்கும் இலங்கை 23 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி, குழு  A இல் காணப்படும் ஏனைய மூன்று அணிகளான சிரியா, கட்டார் மற்றும் யெமன் ஆகிய நாடுகளுடன் ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான கனவுகளுடன் பலப்பரீட்சை நடாத்தவிருக்கின்றது. 

மொத்தம் 15 நாடுகள் பங்குபெறவிருக்கும் 2022ஆம் ஆண்டுக்கான 23 வயதுக்குட்பட்ட ஆசிய சம்மேளன கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் 42 நாடுகளின் அணிகள் 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறவிருக்கின்றன. இதில் 23 நாடுகள் ஆசியாவின் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களைச் சேர்ந்ததாகவும், ஏனைய 19 நாடுகள் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பிராந்தியங்களை சேர்ந்ததாகவும் காணப்படுகின்றன. 

இதேநேரம், இந்த தகுதிகாண் போட்டிகளில் விளையாடவிருக்கும் குழுக்களில் இருந்து வெற்றியாளராகும் பதினொரு அணிகளும், இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொள்ளும் ஏனைய நான்கு சிறந்த அணிகளும் 2022ஆம் ஆண்டுக்கான 23 வயதுக்குட்பட்ட ஆசிய சம்மேளன கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறவிருக்கின்றன.    

“கிராமிய மட்டத்தில் கால்பந்தை அபிவிருத்தி செய்வதே முதல் இலக்கு” – ஜஸ்வர் உமர்

அதேநேரம், இந்த தகுதிகாண் போட்டிகள் அனைத்தும் வெவ்வேறு நாடுகளின் கால்பந்து அரங்குகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவிருக்கின்றன. 

இதன்படி, இலங்கை 23 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி பங்குபெறுகின்ற தகுதிகாண் போட்டிகள் அனைத்தும் கட்டாரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. 

குழுக்களின் விபரம்

AFC Website

மேலும் கால்பந்து செய்திகளுக்கு…