இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பதிவு இரத்து

467

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினுடைய பதிவினை (Registration) தற்காலிகமாக இரத்துச் செய்திருப்பதாக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அரசாங்க வர்த்தமானி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

>>பிரேசிலை வீழ்த்தி மொரோக்கோ வரலாற்று வெற்றி

விளையாட்டுத்துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க இலங்கையின் கால்பந்து விளையாட்டுக்கு பொறுப்பாக இருக்கும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பதிவினை, விளையாட்டு அமைச்சராக தனக்கு இருக்கும் அதிகாரங்களை உபயோகித்தே தற்காலிகமான முறையில் இரத்துச் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை இந்த தற்காலிக இரத்து அமுலில் இருக்கும் காலப்பகுதியில்  தேசிய விளையாட்டு கவுன்சில் கூறியதற்கு அமைய விளையாட்டு அபிவிருத்திப் பிரிவினுடைய பிரதான இயக்குனர் மூலமாக, கால்பந்து விளையாட்டு சார்பான நிர்வாக விடயங்களும், தேர்தல் விடயங்களும் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. அதேவேளை, இந்த தற்காலிக பதிவு இரத்தானது ஏப்ரல் மாதம் 04ஆம் திகதியில் இருந்து அமுலாகுவதாகவும் அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

முன்னதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக தேர்தல்களில் குழப்பங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்ததோடு, அதன் எதிரொலியாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தடையும் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<