21வது வீரர்களின் சமரில் ஸ்கந்தவரோதயா கல்லூரி முன்னிலையில்!

21st Battle of the Heroes 2023

289
21st Battle of the Heroes 2023

தெள்ளிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு எதிரான 21வது வீரர்களின் சமரின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி 19 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது.

ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தவரோதயா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மகாஜனக் கல்லூரிக்கு வழங்கியது.

>> டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மோதலில் இலங்கை – இந்தியா!

அதன்படி களமிறங்கிய மகாஜனாக் கல்லூரியின் முதல் இலக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மத்தியவரிசையில் சூரியகுமார் சுமிஷ்கரன் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவருக்கு அடுத்தப்படியாக தர்மராசா அபிசாந்த் 16 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களை கடக்கவில்லை.

ஸ்கந்தவரோதயா அணியின் பந்துவீச்சில் லவன் கஜனன் 4 விக்கெட்டுகளையும், கேதிஷ்வரன் நிதுசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற 46.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மகாஜனக் கல்லூரி பெற்றுக்கொண்டது.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஸ்கந்தவரோதயா அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிவானந்தன் வசீகரன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

எனினும் துரதிஷ்டவசமாக அரைச்சதத்தை தவறவிட்ட இவர் 43 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவரின் துடுப்பாட்டத்தைக் கடந்து தடுமாறத்தொடங்கிய ஸ்கந்தவரோதயா அணிக்கு மத்தியவரிசையில் மகாலிங்கம் பிரணவன் 22 ஓட்டங்களை பெற்று சற்று ஆறுதல் அளித்தாலும், மீண்டும் துடுப்பாட்டம் வலுவிழக்கத் தொடங்கியது.

எனினும் முதல் நாள் ஆட்டநேரம் இறுதிவரை நிரஞ்சன் ஸ்டீபன் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில், ஸ்கந்தவரோதயா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. பந்துவீச்சில் கிருபாரத்னம் துவாரகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்த, ஸ்கந்தவரோதயா அணி 19 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது.

மகாஜனக் கல்லூரி – 107/10 (46.2), சுமிஷ்கரன் 32, கஜனன் 20/4, நிதுசன் 13/3

ஸ்கந்தவரோதயா கல்லூரி – 126/7 (49), வசீகரன் 43, ஸ்டீபன் 24*, துவாரகன் 18/5

முடிவு – ஸ்கந்தவரோதயா கல்லூரி 19 ஓட்டங்களால் முன்னிலை

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<