IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம்

146

இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் நேற்று (22) பங்கேற்றிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் சேம் கர்ரன் ஆகியோருக்கு அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது.  

டேவிட், பொலார்டிற்கு அபாரதம் வழங்கிய BCCI

இந்திய பிரீமியர் லீக் தொடரில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. விடயங்கள் இவ்வாறிருக்க இந்தப் போட்டியில் மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காக ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் இந்திய நாணயப்படி 12 இலட்சம் (இலங்கை நாணயப்படி சுமார் 43 இலட்சங்கள்) அபராதமாக பெறுகின்றார் 

அதேவேளை குஜராத் டைடன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் சேம் கர்ரன் தனது போட்டிக்கட்டணத்தில் 50% இணை அபராதமாக செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். சேம் கர்ரன் நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒ5898ன்றுக்கு எதிராக தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியமைக்காகவே குறித்த அபாரதத்தினை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இரண்டு வீரர்களும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மீள் பரிசீலணையின்றி ஒப்புக்கொள்வதாக கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<