Home Tamil தோல்வியுறாத அணியாக தொடரில் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ்

தோல்வியுறாத அணியாக தொடரில் முன்னேறும் கண்டி பல்கொன்ஸ்

698
Jaffna Kings vs Kandy Falcons

நேற்று (10) நடைபெற்று முடிந்திருக்கும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் கண்டி பல்கொன்ஸ், தொடரின் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி தொடரில் மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

>> கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்!

மேலும் இந்த வெற்றியுடன் கண்டி பல்கொன்ஸ் அணி இந்தப் பருவகாலத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் தோல்வியடையாத அணியாக தொடரில் முன்னேறுகின்றது.

கண்டி பல்லேகல சர்வதேச அரங்கில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி, வனிந்து ஹஸரங்கவின் கண்டி பல்கொன்ஸ் அணியினால் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்டது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் வீரர்கள் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தனர். ஜப்னா கிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சொஹைப் மலிக் 24 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

மறுமுனையில் கண்டி பல்கொன்ஸ் அணி பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க, பெபியன் அலன் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 148 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி பல்கொன்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறிய போதும் அஷேன் பண்டார, சாமிக்க கருணாரட்ன ஆகியோரின் இன்னிங்ஸ்கள் கைகொடுக்கத் தொடங்கியது.

தொடர்ந்து இறுதிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியின் வெற்றி இலக்கினை கண்டி பல்கொன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களுடன் அடைந்தது.

>> முதலாவது மகளிர் IPL தொடர் அடுத்த ஆண்டில்

கண்டி பல்கொன்ஸ் அணிக்காக ஆட்டமிழக்காமல் இறுதி வரை போராடிய சாமிக்க கருணாரட்ன 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் அஷேன் பண்டார 39 பந்துகளுக்கு 44 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் அதன் இளம் வீரர் துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

Result


Kandy Falcons
148/6 (20)

Jaffna Kings
147/7 (20)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz b Fabian Allen 16 13 3 0 123.08
Avishka Fernando c Zahoor Khan b Wanidu Hasaranga 31 26 4 0 119.23
Dhananjaya de Silva lbw b Wanidu Hasaranga 10 14 1 0 71.43
Sadeera Samarawickrama b Fabian Allen 14 12 2 0 116.67
Shoaib Malik c Chamika Karunaratne b Isuru Udana 28 24 2 0 116.67
Dunith wellalage c Chamika Karunaratne b Zahoor Khan 20 18 1 1 111.11
Thisara Perera not out 8 6 1 0 133.33
James Fuller c Ashen Bandara b Isuru Udana 4 3 0 0 133.33
Vijayakanth Viyaskanth not out 3 4 0 0 75.00


Extras 13 (b 4 , lb 1 , nb 0, w 8, pen 0)
Total 147/7 (20 Overs, RR: 7.35)
Bowling O M R W Econ
Zahoor Khan 4 0 28 1 7.00
Carlos Brathwaite 2 0 19 0 9.50
Isuru Udana 4 0 32 2 8.00
Fabian Allen 4 0 23 2 5.75
Wanidu Hasaranga 4 0 26 2 6.50
Kamindu Mendis 2 0 14 0 7.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Sadeera Samarawickrama b Dunith wellalage 29 24 2 0 120.83
Andre Fletcher c Avishka Fernando b Zaman Khan 11 11 2 0 100.00
Kamindu Mendis c Sadeera Samarawickrama b James Fuller 19 9 4 0 211.11
Ashen Bandara not out 44 39 3 0 112.82
Wanidu Hasaranga b Dunith wellalage 6 10 0 0 60.00
Fabian Allen c Thisara Perera b Vijayakanth Viyaskanth 0 3 0 0 0.00
Carlos Brathwaite c & b 3 6 0 0 50.00
Chamika Karunaratne not out 26 16 2 2 162.50
Isuru Udana not out 1 2 0 0 50.00


Extras 9 (b 2 , lb 4 , nb 0, w 3, pen 0)
Total 148/6 (20 Overs, RR: 7.4)
Bowling O M R W Econ
Thisara Perera 1 0 6 0 6.00
Mahesh Theekshana 4 0 29 1 7.25
Zaman Khan 3 0 36 1 12.00
James Fuller 4 0 35 1 8.75
Vijayakanth Viyaskanth 4 0 19 1 4.75
Dunith wellalage 4 0 17 2 4.25



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<