T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் 4 மாற்றங்கள்!

ICC Men’s T20 World Cup 2021

1409
 

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குழாத்திலிருந்து 4 மாற்றங்களை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம் 15 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டிருந்த போதும், இன்றைய தினம் வரை (10) அணியில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு, ஐசிசி அனுமதித்திருந்தது.

அந்தவகையில், உபாதைக்கு முகங்கொடுத்திருந்த லஹிரு மதுஷங்க மற்றும் நுவான் பிரதீப் ஆகியோருடன், கமிந்து மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் T20 உலகக்கிண்ண குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர்களான பினுர பெர்னாண்டோ, லஹிரு குமாரவுடன், பெதும் நிஸ்ஸங்க மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் குழாத்துக்குள் இடம்பிடித்துள்ளனர்.

அத்துடன், அணியில் இடம்பெறுவாரா? என கேள்வியை எழுப்பியிருந்த, உபாதையிலிருந்து குணமடைந்து வரும் குசல் பெரேரா 15 பேர்கொண்ட  இறுதி குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

இலங்கை அணியின் முதல் சுற்றுக்கான போட்டிகள்

  • எதிர் நபீபியா – 18 ஒக்டோபர்– அபு தாபி
  • எதிர் அயர்லாந்து – 20 ஒக்டோபர்- அபு தாபி
  • எதிர் நெதர்லாந்து – 22 ஒக்டோபர் – ஷார்ஜா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<