இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயண அட்டவணை

1738

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

IPL தொடரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வனிந்து, சமீர, பானுக & தீக்ஷன

இங்கிலாந்துக்கு மே மாத ஆரம்பத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, அங்கே இங்கிலாந்து வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகள் 03 இலும், மூன்று T20 போட்டிகளிலும் ஆடவிருக்கின்றது.

இந்த சுற்றுத்தொடருக்காக மே மாதம் 01ஆம் திகதி இங்கிலாந்து பயணமாகும், இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி முதலாவதாக நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகளிலும், அதனைத் தொடர்ந்து T20 போட்டிகளிலும் ஆடவிருக்கின்றது.

நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகள் மே மாதம் 06ஆம் திகதியும், T20 போட்டிகள் மே மாதம் 25ஆம் திகதி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப்-சென்னை மோதலில் ரிஷி தவான் முகக் கவசம் அணிந்தது ஏன்?

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் இலங்கையின் இளம் வீரர்களுக்கு சர்வதேசப் போட்டிகளுக்கான அனுபவத்தினை பெற்றுக்கொடுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டி அட்டவணை

  • மே 06ஆம் திகதி தொடக்கம் 09ஆம் திகதி வரை – முதலாவது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டி – கென்டர்பெர்ரி, கென்ட்
  • மே 13ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை – இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டி – ஏஜியாஸ் போல், ஹம்ப்ஷைர்
  • மே 20ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை – மூன்றாவது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டி – சர்ரேய்
  • மே 25ஆம் திகதி – முதல் T20 போட்டி – கியா ஓவல், சர்ரேய்
  • மே 27ஆம் திகதி – இரண்டாவது T20 போட்டி – சமர்சேட்
  • மே 29ஆம் திகதி – மூன்றாவது T20 போட்டி – குளேகஸ்டரைர்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<