பஞ்சாப்-சென்னை மோதலில் ரிஷி தவான் முகக் கவசம் அணிந்தது ஏன்?

592

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சுபர் கிங்ஸ் அணிகள் இடையிலான IPL தொடரின் 38ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றதோடு, இந்தப் பருவகாலத்திற்கான தொடரில் அது அவர்களின் 4ஆவது வெற்றியாகவும் அமைந்தது.

பானுக, தவானின் பிரகாசிப்புகளுடன் வெற்றிப்பாதைக்கு திரும்பிய பஞ்சாப்

இந்தப் போட்டியில் தனது அபார துடுப்பாட்டத்திற்காக சிகர் தவான் ஆட்டநாயகனாக தெரிவாகிய போதும், இப்போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளரான ரிஷி தவானும் அனைவர் மூலமும் அவதானிக்கப்பட்ட வீரராக மாறியிருந்தார்.

ரிஷி தவான் அனைவர் மூலமும் அவதானிக்கப்பட்டமைக்கு அவர் பஞ்சாப் – சென்னை அணிகள் இடையிலான போட்டியில் கைப்பற்றிய 2 விக்கெட்டுக்கள் மாத்திரம் காரணமாக அமைந்திருக்கவில்லை. இந்தப் போட்டியில் அவர் அணிந்த விஷேட முகக் கவசமும் அதற்கு காரணமாக அமைந்தது.

ரிஷி தவான் அணிந்த விஷேட முகக் கவசம் குறித்து சமூக ஊடகங்களில் பெரும்பாலானோர் விவாதங்களை மேற்கொண்டிருந்ததோடு, தற்போது அவர் குறித்த முகக் கவசத்தினை அணிந்தமைக்கான தெளிவு கிடைத்திருக்கின்றது.

தவான் இந்தியாவின் உள்ளூர் முதல்தர தொடரான ராஞ்சிக் கிண்ணத் தொடரில் ஆடும் போது, முகத்தில் பந்து பட்டதன் காரணமாக கடின உபாதை ஒன்றுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, அந்த உபாதை சத்திர சிகிச்சை ஒன்றினையும் அவர் மேற்கொள்ள காரணமாக அமைந்திருந்தது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

எனவே இந்த உபாதையின் காரணமாகவே, ரிஷி தவான் முகத்தினைப் பாதுகாக்கும் விஷேட கவசம் அணிந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் ரிஷி தவான், இந்தப் பருவகாலத்திற்கான IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியினால் 55 இலட்சம் ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு ரிஷி தவான் கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரிலும், தனது தாயக அணியான ஹிமாச்சல் பிரதேச அணியினைப் பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<