இலங்கை 17 வயதின் கீழ் கால்பந்து அணிக்கான வீரர்கள் தெரிவு இவ்வாரம்

381

நடைபெறவுள்ள 17 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரினை அடிப்படையாக வைத்து இலங்கை தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தெரிவு இவ்வாரம் ஆரம்பமாகவுள்ளது.

>> SAFF 17 வயதின்கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் இலங்கையில்

17 வயதின் கீழ் கால்பந்து வீரர்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் (17 வயதின் கீழ் SAFF சம்பியன்ஷிப் தொடர்), செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவிருக்கின்றது.

இந்த தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் பொருட்டுடனும், அவர்களை தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடருக்கு தயார்படுத்தும் நோக்குடனும் 17 வயதின் கீழ்ப்பட்ட தேசிய அணியின் வீரர்கள் தெரிவு இடம்பெறவிருக்கின்றது.

அதேநேரம், இந்த வீரர் தெரிவுகள் மாகாண அடிப்படையில் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளதோடு, அதிலிருந்து தெரிவு செய்யப்படும் வீரர்கள் இறுதி தெரிவுக்காக ஒகஸ்ட் மாதம் 08ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் பெத்தகான தேசிய கால்பந்து பயிற்சி நிலையத்திற்கு அழைக்கப்படுவர்.

>> சொலிட் அணியை அபாரமாக வீழ்த்திய செரண்டிப்

இதேநேரம், இந்த வீரர் தெரிவுகளுக்காக பாடசாலை அதிபர்கள், தத்தமது பாடசாலைகளில் இருந்து ஜனவரி 01, 2006 தொடக்கம் டிசம்பர் 31, 2008 வரையிலான காலப்பகுதியில் பிறந்திருக்க கூடிய (அதாவது பிறந்த திகதிகளை கொண்ட) மூன்று வீரர்களை சிபாரிசு செய்ய பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது.

தெரிவுகளின் கட்டங்களும், அவை இடம்பெறுகின்ற இடங்களும்

முதற்கட்டம் (வட மாகாணம்)

இடம் – தேசிய கால்பந்து பயிற்சி நிலையம், அரியாலை, யாழ்ப்பாணம்

  • ஒகஸ்ட் 05 – முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா
  • ஒகஸ்ட் 06 – யாழ்ப்பாணம் மற்றும் மன்னார்

 

இரண்டாம் கட்டம் (கிழக்கு, வட மத்திய மாகாணங்கள்)

இடம் – தேசிய விளையாட்டுத் தொகுதி (பொலன்னறுவை)

  • ஒகஸ்ட் 05 – அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை
  • ஒகஸ்ட் 06 – அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை

மூன்றாம் கட்டம் (மேல், தென், வடமேல், சபரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள்)

இடம் – தேசிய கால்பந்து பயிற்சி நிலையம், பெத்தகான

  • ஒகஸ்ட் 05 – குருநாகல், புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி
  • ஒகஸ்ட் 06 – கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை
  • ஒகஸ்ட் 07 – பதுளை, மொனரகலை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா

*வீரர்கள் அனைவரும் பதிவுகளுக்காக குறிப்பிடப்பட்ட நாட்களில், குறிப்பிடப்பட்ட மாவட்ட வீரர்கள் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு காலை 7 மணிக்கு கட்டாயம் சமூகம் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*கால்பந்து வீரர்களின் பரிந்துரைக்கான மாதிரி விண்ணப்பபடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<