நியூசிலாந்துடன் மோதவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெளியீடு

2583

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் தற்போது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் பின்னர், இலங்கை நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவுள்ளன.

மாலிங்க தலைமையிலான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக………..

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் இந்த T20 தொடருக்கு முன்னர், கட்டுநாயக்க MCG மைதானத்தில் வைத்து நியூசிலாந்து அணி இம்மாதம் 29ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியுடன் பயிற்சி T20 போட்டி ஒன்றில் ஆடவுள்ளது. இந்த பயிற்சி T20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதவிருக்கும் 12 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் வீரர்கள் குழாம் இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணியுடனான T20 தொடருக்கான இலங்கை குழாம் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அதில் உள்வாங்கப்பட்டிருக்கும் சகலதுறை வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் பயிற்சி T20 போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியிலும் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வீரர்கள் அனைவரின் மூலமும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

எனினும், இலங்கை T20 அணியில் உள்வாங்கப்படாத அதிரடி சகலதுறை வீரர் திசர பெரேராவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்காக திசர பெரேரா அண்மைக்காலமாக ஜொலிக்க தவறியதனை அடுத்தே இலங்கை T20 குழாம், இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம் ஆகிய இரண்டிலும் அவர் வாய்ப்பினை இழந்திருக்கின்றார். 

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு: வில்லியம்சன் இல்லை

இலங்கை மற்றும் நியூசிலாந்து………..

இதேநேரம் இலங்கை T20 குழாத்தில் உள்ள சைனமன் சுழல் வீரர் லக்ஷான் சந்தகன், வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியில் இணைவதன் மூலம் தங்களது திறமைகளை நியூசிலாந்து அணியுடன் பரீட்சித்து பார்க்கும் சந்தர்ப்பத்தை பெற்றிருக்கின்றனர். 

அதேவேளை, நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி T20 போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் தலைவராகவும் பிரதான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகவும், சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் அஷான் பிரியஞ்சன் செயற்படவுள்ளார். அஷான் பிரியஞ்சன் முன்னதாக இந்தமாத ஆரம்பத்தில் நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியில் அரைச்சதம் (56*) ஒன்றினை விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அஷான் பிரியஞ்சனோடு இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் துடுப்பாட்ட வீரர்களாக இலங்கை T20 அணியில் இணைக்கப்படாத சதீர சமரவிக்ரம, பானுக்க ராஜபக்ஷ மற்றும் அஞ்சலோ பெரேரா ஆகியோர் பலம் தருகின்றனர்.

டெஸ்ட் வரலாற்றில் 30 வருட சாதனையை சமன் செய்த வோர்னர் – பெய்ன் ஜோடி

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய……

மறுமுனையில் இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளின் போது பிரதான வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் நுவான் பிரதீப், நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி T20 போட்டியிலும், தனது வேகத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்காக கசுன் ராஜிதவுடன் இணைந்து பெறுமதி சேர்க்கவுள்ளார்.

நியூசிலாந்து – இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் ஆகியவை இடையே இடம்பெறவுள்ள இந்த பயிற்சி T20 போட்டி பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.   

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் குழாம் 

அஷான் பிரியஞ்சன் (அணித்தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, சதீர சமரவிக்ரம (விக்கெட்காப்பாளர்), பானுக்க ராஜபக்ஷ, அஞ்செலோ பெரேரா, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, லஹிரு மதுசங்க, நுவான் பிரதீப், லக்ஷான் சந்தகன், கசுன் ராஜித

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<