Home Tamil ஸ்கொட்லாந்திடம் போராடி வென்ற நியூசிலாந்து அணி

ஸ்கொட்லாந்திடம் போராடி வென்ற நியூசிலாந்து அணி

155
Getty Images

ஸ்கொட்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுக்காக நடைபெற்ற போட்டியில், சிறு போராட்டம் காட்டியிருந்த நியூசிலாந்து அணி 16 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

ஆறுதல் வெற்றிக்காக மே.தீவுகளுடன் மோதும் இலங்கை!

சுபர் 12 சுற்றின் குழு 2 இல் காணப்படும் நியூசிலாந்து – ஸ்கொட்லாந்து அணிகள் மோதிய போட்டி இன்று (03) துபாய் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணியின் தலைவர் கைல் கொயெட்சர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நியூசிலாந்து அணிக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்துடுப்பாட்டவீரர் மார்டின் கப்டில் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதத்தினை வெறும் 7 ஓட்டங்களால் தவறவிட்டிருந்த மார்டின் கப்டில் 56 பந்துகளுக்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம் கிளன் பிலிப்ஸ் 33 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் சபியான் சரிப் மற்றும் வீல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பெற்ற வனிந்து

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 173 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி, வெற்றி இலக்கினை நெருங்குவதற்கு முயற்சித்த போதும் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டிய மைக்கல் லீஸ்க் 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ட்ரென்ட் போல்ட் மற்றும் இஸ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் வெற்றியோடு நியூசிலாந்து அணி T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்து தமது அரையிறுதி வாய்ப்பினை அதிகரிக்க, ஸ்கொட்லாந்து அணிக்கு நியூசிலாந்து அணியுடனான போட்டி சுபர் 12 சுற்றில் மூன்றாவது தொடர் தோல்வியாக அமைகின்றது.

T20 உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்

போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணிக்காக திறமையான முறையில் செயற்பட்ட மார்டின் கப்டில் தெரிவாகினார். இனி T20 உலகக் கிண்ணத்தில் தமது அடுத்த போட்டியில் நியூசிலாந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) நமீபிய அணியினை எதிர்கொள்ள, அதே நாளில் ஸ்கொட்லாந்து அணி இந்திய அணியினை எதிர்த்து விளையாடுகின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


New Zealand
172/5 (20)

Scotland
156/5 (20)

Batsmen R B 4s 6s SR
Martin Guptill c Calum MacLeod b Brad Wheal 93 56 0 0 166.07
Daryl Mitchell lbw b 13 11 0 0 118.18
Kane Williamson c Matthew Cross b Safyaan Sharif 0 4 0 0 0.00
Devon Conway c Matthew Cross b Mark Watt 1 3 0 0 33.33
Glenn Phillips c Chris Greaves b Brad Wheal 33 37 0 0 89.19
James Neesham not out 10 6 0 0 166.67
Mitchell Santner b 2 3 0 0 66.67


Extras 20 (b 0 , lb 5 , nb 0, w 15, pen 0)
Total 172/5 (20 Overs, RR: 8.6)
Bowling O M R W Econ
Brad Wheal 4 0 40 2 10.00
Safyaan Sharif 4 0 28 2 7.00
Alasdair Evans 4 0 48 0 12.00
Mark Watt 4 0 13 1 3.25
Chris Greaves 3 0 26 0 8.67
Michael Leask 1 0 12 0 12.00


Batsmen R B 4s 6s SR
George Munsey c & b Ish Sodhi 22 18 0 0 122.22
Kyle Coetzer c Tim Southee b Trent Boult 17 11 0 0 154.55
Matthew Cross b Tim Southee 27 29 0 0 93.10
Richie Berrington c Devon Conway b Ish Sodhi 20 16 0 0 125.00
Calum MacLeod b Trent Boult 12 15 0 0 80.00
Michael Leask not out 42 20 0 0 210.00
Chris Greaves not out 8 10 0 0 80.00


Extras 8 (b 0 , lb 2 , nb 0, w 6, pen 0)
Total 156/5 (20 Overs, RR: 7.8)
Bowling O M R W Econ
Trent Boult 4 0 29 2 7.25
Tim Southee 4 0 24 1 6.00
Adam Milne 4 1 36 0 9.00
Mitchell Santner 4 0 23 0 5.75
Ish Sodhi 4 0 42 2 10.50



முடிவு – நியூசிலாந்து அணி 16 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<