ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இங்கிலாந்து செல்லும் இலங்கை வீரர்கள்

Sri Lanka Cricket

60

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் தொடர்பிலான தீர்மானங்கள், இங்கிலாந்து தொடர் நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்களுக்கிடையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக இலங்கை வீரர்கள், கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்படவுள்ள LPL தொடர்

அதன்படி, வீரர்கள் நேற்றைய தினத்துக்குள் (06) வருடாந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், இல்லையெனில் ஒவ்வொரு தொடர்களுக்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், வீரர்கள் ஒப்பந்தத்தில் கையழுத்திட மறுத்திருந்தனர். எனவே, இன்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் தங்களுடைய முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக இலங்கை அணி, நாளைய தினம் இங்கிலாந்து தொடருக்காக புறப்படவுள்ளது.

எனவே, இங்கிலாந்து தொடர் நடைபெறுமா? அல்லது இலங்கை கிரிக்கெட் சபை வேறு தீர்மானங்களை அறிவிக்குமா? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், தற்போது, வீரர்கள் இங்கிலாந்து தொடருக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கை வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் கையழுத்திடவில்லை.

இதன்படி, இங்கிலாந்து தொடர் நிறைவடைந்த பின்னர், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் வீரர்கள் இணைந்து ஒப்பந்தம் தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எடுப்பார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகளில் விளையாடியுள்ளது, இந்த தொடர் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…