காயங்களால் இலங்கை அணியில் தொடரும் சோகம்

2485

நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக முன்னணி வீரர்கள் பலரும் விலகி இருக்கும் நிலையில், எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின்போதும் இலங்கை அணியின் காயமடைந்த வீரர்களின் பட்டியல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த தொடரில் இவ்வாறு ஏழு முன்னணி வீரர்கள் பங்குபற்றுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கண்டி அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் காலி அணித்தலைவர் சுரங்க லக்மால் உட்பட பல முன்னணி வீரர்களுக்கும்  மாகாணங்களுக்கு இடையில் இடம்பெறவள்ள மூன்று போட்டிகளில் ஏற்கனவே இரண்டில் ஆட முடியாமல் போயுள்ளது.

இதன் பிறகு அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீச மாட்டார்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20..

சுதந்திர கிண்ணத்திற்கு முன்னராக, கெண்டைக்கால் பகுதியில் காயத்திற்கு உள்ளான மெதிவ்ஸ் அதில் இருந்து மீண்டு வரும் நிலையில் லக்மால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக காலி அணியின் முதல் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

மறுபுறம் சுதந்திரக் கிண்ணத்தில் பங்களாதேஷுக்கு எதிரான கடைசி குழுநிலை போட்டியின்போது நுவன் பிரதீப் தொடை பகுதியில் உபாதைக்கு உள்ளானார். அதேபோன்று, மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் 11 ஓவர்களை மாத்திரம் வீசிய நிலையில் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர, எலும்பு முறிவு உபாதைக்கு முகம்கொடுத்து ஐந்து வாரங்கள் போட்டியில் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார். அவர் தற்போது உடற்தகுதி பெறுவதற்கான சிகிச்சைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரால் மூன்று வாரங்களுக்கு பின்னரே வலை பயிற்சியில் பந்துவீச முடியுமாகியுள்ளது.

பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் தனது கன்னிப் போட்டியிலேயே ஹட்ரிக் சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் செஹான் மதுஷங்கவும் தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதையில் இருந்து மீண்டு வருகிறார்.   

காயமடைந்தவர்களின் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரமன்றி, சகலதுறை வீரர் அசேல குணரத்னவும் தனது உபாதையில் இருந்து மீண்டு வரவேண்டி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின்போதான களத்தடுப்பு பயிற்சியின்போது தனது வலது கையில் காயத்திற்கு உள்ளான குணரத்ன, அதில் இருந்து சுகம்பெற இன்னும் மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.  

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் துஷ்மன்த சமீர சந்தேகம்

தற்போது நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு..

சுதந்திரக் கிண்ணத்தில் அதிரடியாக அதிக ஓட்டங்கள் குவித்த விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் பெரேராவும் தொடைப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் உபாதைக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் இதுவரையான போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, நுவன் பிரதீப் மற்றும் மதுஷங்க இருவரும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான அணித் தேர்வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் சமீர அந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் உடல் தகுதியை நிரூபிக்க காலத்துடன் போராடுகிறார்.   

மெதிவ்ஸ், லக்மால் மற்றும் பெரேரா ஆகியோர் அடுத்த வாரம் நடைபெறும் மாகாணங்களுக்கு இடையிலான தொடரின் கடைசி போட்டிகளில் தத்தமது அணிகளுக்காக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘அண்மைக் காலத்தில் எமது வீரர்களிடையே அதிக காயம் ஏற்படுவதற்கான காரணம் பற்றி நாம் கண்டறிய முயற்சித்தோம். கடந்த 16 மாதங்களில் நாம் வேறு எந்த அணியை விடவும் 18 வீதம் அதிக போட்டிகளில் ஆடி இருப்பது எமக்கு தெரியவந்தது’ என்று இலங்கை தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் குறிப்பிட்டிருந்தார்.

‘சிலவேளை, சில வீரர்களை அவர்கள் சரியாக சுகம்பெறுவதற்கு முன்னரே விரைவில் சுகம்பெற அவசரப்படுத்துவதும் ஒரு காரணமாக இருக்கலாம்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ச்சியான காயங்களை அடுத்து உடல் தகுதிக்கான தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை வீரர்களுக்கான குறைந்தபட்ச உடற்தகுதி அளவுகோலும் அணித் தேர்வில் கருத்தில் கொள்ளப்படுகிறது. இதற்கு மத்தியிலும் வீரர்களின் காயங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இலங்கைக்கு அடுத்த 10 மாதங்களும் பரபரப்பான போட்டி அட்டவணை காணப்படுகிறது. இந்த காலப்பிரிவில் இலங்கை அணி 15 டெஸ்ட் போட்டிகள் மற்றும் குறைந்தது 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடவுள்ளது. இலங்கை அணி அடுத்து வரும் மே மாதம் கடைசியில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன் முதல் போட்டி ஜுன் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<