மெய்வல்லுனர் வீரராக இருந்து கிரிக்கெட் வீரராக மாறிய இசுரு உதான

141

கிரிக்கெட் உலகில் வீரர்களை பணக்காரர்களாக மாற்றுகின்ற முதன்மை தொடர் தான் இந்தியாவில் நடைபெற்று வருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் என்றழைக்கப்படுகின்ற ஐ.பி.எல் டி20 தொடராகும். 

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை .பி.எல் தொடரில் இலங்கை அணியிலிருந்து இசுரு உதான மாத்திரம் ஏலத்தில் வாங்கப்பட்டார்.   

>>தென்னாபிரிக்க தொடரைப் போல உலகக் கிண்ணத்திலும் பிரகாசிப்பேன் – இசுறு உதான<<

இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற வீரர்களில் முதன்மையானவராக இசுரு உதான விளங்குகிறார்.  

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி தனது திறமைகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்ற இசுரு உதானவுக்கு உலகின் முதன்மையான டி20 லீக் தொடரான .பி.எல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை

இறுதியாக, 2009ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தாலும், உபாதை காரணமாக அவரால் அந்தத் தொடரில் துரதிஷ்டவசமாக விளையாட முடியாமல் போனது

அதன்பிறகு தொடர்ந்து .பி.எல் ஏலத்தில் அவர் களமிறங்கிய போதும், எந்தவொரு அணியும் அவரை  வாங்குவதற்கு முன்வரவில்லை. இந்த நிலையில், இந்த வருட ஏலத்திலும் இசுரு உதான ஏமாற்றம் அடைவார் என எதிர்பார்க்கப்பட்டது

ஆனால், இசுரு உதானவின் திறமையை அங்கீகரித்து றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

எனவே, விராத் கோஹ்லி, ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளதால் இம்முறை .பி.எல் தொடரில் திறமையை நிரூபிக்க இசுரு உதானவுக்கு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

அவருக்கு பெங்களூர் அணிக்காக பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைப்பது சந்தேகத்தைக் கொடுத்தாலும், அடுத்த வருடமும் கோஹ்லி தலைமையிலான றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இசுரு உதானவை தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்குத் தன் திறமையை நிரூபிப்பார் என்று இலங்கை ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில், இலங்கையின் தேசிய சிங்கள பத்திரிகையொன்றுக்கு இசுரு உதான அண்மையில் வழங்கிய விசேட நேர்காணலில் இம்முறை .பி.எல் தொடரில் முதல்தடவையாக விளையாடுவது குறித்தும், தனது அடுத்த கட்ட எதிர்பார்ப்பு குறித்தும் உதான சொல்லி இருந்தார். அதன் தொகுப்பை இங்கு பார்க்கலாம். 

இசுரு உதான என்பவர் டி20 போட்டிகளுக்கு மாத்திரம் முத்திரை குத்தப்பட்ட வீரரா?

இல்லை. என்னால் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியும். அதேபோல தற்போது என்னால் டெஸ்ட் விளையாட முடியாது. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக உள்ளேன்

எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நானே முன்மாதிரி – மொஹமட் சமாஸ்

தென்னாபிரிக்காவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட…

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற டி20 லீக் தொடர்களில் உங்களை அடிக்கடி காணமுடிகின்றது. இதற்கான இரகசியம் என்ன?

நான் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகின்றேன். தற்போதை காலகட்டத்தில் திறமைகளை வெளிக்காட்டுகின்ற வீரர்களுக்குு இவ்வாறான போட்டித் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்

எனவே, அந்தப் பட்டியலில் நானும் ஒருவனாக வலம்வந்து கொண்டிருக்கின்றேன். அதன் காரணமாகத் தான் என்னை ஒரு டி20 வீரராக மாத்திரம் அனைவரும் பார்க்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் தென்னாபிரிக்காவில் நிறைவுக்கு வந்த மான்ஸி சுப்பர் லீக் டி20 தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற பெர்ள் ரொக்ஸ் அணிக்காக நீங்களும் விளையாடியிருந்தீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

உண்மையில் எனது வாழ்க்கையில் அது மறக்க முடியாத தொடராகும். முதல்தடவையாகத் தான் நான் தென்னாபிரிக்காவில் அவ்வாறான தொடரொன்றில் விளையாடினேன். தென்னாபிரிக்க டெஸ்ட் அணித் தலைவர் பாப் டு பிளெசிஸ், ஜேபி டுமினி ஆகிய 2 வீரர்களும் எமது அணியில் தான் இடம்பெற்றிருந்தனர். அவர்களுடன் உடை மாற்றும் அறையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது

கால்பந்தை நேசித்து கிரிக்கெட்டில் ஜொலித்த அசித்த பெர்னாண்டோ

பாடசாலையின் இடைவெளி நேரங்களில் மாணவர்கள் பல விளையாட்டுக்களில்…

வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான தென்னாபிரிக்க ஆடுகளங்களில் பந்துவீசிய அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

பொதுவாக டி20 போட்டிகளைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் தான் தயாரிக்கப்படுகின்றன. எனினும், தென்னாபிரிக்காவில் உள்ள ஆடுகளங்களில் வேகத்தைக் காட்டிலும், பந்து அதிகம் பவுண்சர் ஆகும். அதன் சாதகத்தைப் பயன்படுத்தி அணிக்கு தேவையான பங்களிப்பினை வழங்கினேன்

அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் உங்களுக்கு திருமணம் முடிப்பதற்கான அழைப்பொன்றும் கிடைத்தது. அதைப் பற்றிச் சொல்லுங்கள்?  

தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பதாதையொன்றை காண்பித்தார். நான் அதை மைதானத்தில் உள்ள இலத்திரனியல் திரையில் பார்த்தேன்

எனினும், நான் ஏற்கனவே திருமணம் முடித்தவன் என்ற படியால் எனது கைவிரலில் உள்ள மோதிரத்தை அந்தப் பெண்ணுக்கு காண்பித்தேன்

தென்னாபிரிக்கா டி20 தொடர் முடிந்த கையோடு இம்முறை .பி.எல் தொடரிலும் நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டீர்கள். அது பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

உலகில் உள்ள மிகவும் பிரபல்யமான டி20 லீக் தொடர்களில் .பி.எல் தொடர் முதன்மையானது. கிரிக்கெட் விளையாடுகின்ற அனைத்து நாடுகளையும் சேர்ந்த முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பார்கள்.   

எனவே, இந்தத் தொடர் நிச்சயம் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் என நம்புகிறேன். எனினும், இதற்குமுன் 2009ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ஒப்பந்தம் செய்தது. துரதிஷ்டவசமாக அப்போது என்னால் விளையாட முடியாமல் போனது.

இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை

நாம் பிரியாவிடை கொடுத்த 2019 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிக…

உங்களுக்குப் பிடித்த .பி.எல் அணி என்ன?

ஆரம்பத்திலிருந்து நான் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியைத் தான் அதிகம் விரும்பினேன். தற்போது அந்த அணிக்காக விளையாடவுள்ளேன்

உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அணியில் எனக்கு மிகவும் பிடித்த ஏபி டிவில்லியர்ஸ் உள்ளார். அதேபோல, விராத் கோஹ்லியின் தலைமைத்துவத்தின் கீழ் விளையாடவுள்ளதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.

வெளிநாட்டு டி20 தொடர்களில் நீங்கள் மிகவும் நெருங்கிப் பழகிய வீரர்கள் யார்

நான் நிறைய வீரர்களை சந்திதுள்ளேன். ஆனாலும், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் கிறிஸ் கெய்ல் மற்றும் பிரென்டன் மெக்கலம் ஆகிய இரண்டு வீரர்களுடன் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்தது.

உங்களது மனதை வென்ற கிரிக்கெட் பிரபலங்கள் யார்?

பந்துவீச்சாளர்களை பொறுத்தமட்டில் சமிந்த வாஸ் மற்றும் வசீம் அக்ரம். துடுப்பாட்ட வீரர்களில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேமியன் மார்டினை அதிகம் பிடிக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2019 மீள் பார்வை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல சுவாரஷ்யமான சம்பவங்கள் மற்றும்…

மெய்வல்லுனர் வீரரான நீங்கள் எவ்வாறு கிரிக்கெட் வீரராக மாறினீர்கள்

உண்மையில் ஆரம்பத்தில் நான் சிறந்த மெய்வல்லுனர் வீரராக இருந்தேன். முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் பங்குபற்றினேன். குறிப்பாக 20 வயதுக்குட்பட்ட பிரிவு வரை நடைபெற்ற அனைத்த முப்பாய்ச்சல் போட்டிகளிலும் ஒரு தடவை மாத்திரமே நான் தோல்வியைத் தழுவினேன்

அதேபோல, நான் கிரிக்கெட்டும் விளையாடினேன். அப்போதெல்லாம் கிரிக்கெட் விளையாட வேண்டுமானால் நிறைய பணம் தேவை. ஆனாலும், கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து சென்றால் சிறந்ததொரு எதிர்காலம் இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்

இறுதியில் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு விடைகொடுத்து கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்தேன். எளவே அன்று எடுத்த அந்த முடிவுதான் என்னை இன்று ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு நேரம் கிடைப்பதென்பது மிகவும் குறைவு. எனவே உங்களது மகன் பிறந்த மறுநாளே கிரிக்கெட் தொடரொன்றில் பங்கேற்றீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்?

கடந்த பெப்ரவரி மாதம் எங்களுக்கு ஆண் பிள்ளை கிடைத்தது. மகன் பிறந்து மறுநாளே எனக்கு தென்னாபிரிக்காவுடனான சுற்றுப்பயணத்துக்கான புறப்பட்டுச் செல்ல நேரிட்டது. தற்போது மகனுக்கு 10 மாதங்கள் ஆகின்றது. அவனுடன் இருக்கின்ற காலம் மிகவும் குறைவு என்றபடியால், தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டி20 லீக் தொடருக்காக மனைவியையும், மகனையும் அழைத்துச் சென்றேன்.

புதிய கட்டமைப்புடன் 2022ஐ நோக்கி பயணிக்குமா இலங்கை U19 அணி?

ஐசிசி இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிகமான …

போட்டியொன்றில் வெற்றியைப் போல தோல்வி அடையும் போது சமூகவலைத்தங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கின்றீர்கள்?

என்னைப் பற்றி பல தடவைகள் பேஸ்புக் ஊடாக பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நாங்கள் எப்போதும் போட்டியொன்றில் தோல்வியைத் தழுவுவதற்காக விளையாடுவதில்லை. எமக்கும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தான் உண்டு. ஆனால் தோல்வியைத் தழுவிய பிறகு வெளியாகின்ற ஒருசில கருத்துக்களைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது

இலங்கையில் உள்ள ரசிகர்கள் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கின்றார்கள். அவர்கள் தோல்வியடைவதை விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு அது மிகவும் வேதனையைக் கொடுக்கும் என்பதை நன்கு அறிவேன்

நன்றி – கயேஷான் விதானஆரச்சி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்<<