அதிக தோல்விகள் பெற்ற அணிகளில் இலங்கை முதலிடத்தில்

193
Getty Image

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்தியாவின் உலக சாதனையை இலங்கை அணி முறியடித்தது.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்களை எடுத்தது

இதையடுத்து, 242 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க போராட்டம் வீண்

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இதனிடையே, இங்கிலாந்துடனான தோல்வியின் மூலமாக இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியது .

இதுவரைக்குமான ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகள் தழுவிய அணியாக இந்திய அணி காணப்பட்டது.. இந்திய கிரிக்கெட் அணி 993 போட்டிகளில் பங்கெடுத்து 427 தோல்விகளை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று தமது 860ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை அணி 428ஆவது தோல்வியை பெற்றுக்கொண்டு, இந்தியாவின் உலக சாதனையை முறியடித்தது.

SLCயின் கொள்கை தான் தோல்விக்குக் காரணம்: சங்கக்கார

இதில் இலங்கை அணி இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகளில் 5 போட்டிகள் சமநிலையிலும், 37 போட்டிகள் எந்தவொரு முடிவுகளும் இன்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐசிசி 2023 உலகக் கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் கடைசி (13ஆவது) இடத்தில் இருக்கின்றது.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி 4ஆம் திகதி பிரிஸ்டலில் நடைபெறவுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<