வரலாறு படைத்த இலங்கை பளுதூக்கல் அணி

240

ஆசிய பசுபிக் க்ளெசிக் (Classic), எகியூப்ட் (Equipped) மற்றும் பென்ச் ப்ரெஸ் (Bench Press) சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டித் தொடரில், ஆண்களுக்கான எகியூப்ட் பிரிவில் இலங்கை 6 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்கள் அடங்கலாக ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டித் தொடரில், எகியூப்ட் பிரிவில் சம்பியனாகியுள்ள இலங்கை, வரலாற்றில் முதன் முறையாக சர்வதேச போட்டியொன்றில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

தேசிய சாதனைகளுடன் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்

ஆசிய பசுபிக் க்ளெசிக் (Classic), எகியூப்ட் ….

நேற்று முன்தினம் ஆரம்பமான இந்தப் போட்டித் தொடரில், இலங்கை மகளிர் அணி 4 பதக்கங்களை வென்று சிறந்த ஆரம்பத்தினை பெற்றிருந்த நிலையில், நேற்று ஆண்கள் அணி 7 பதக்கங்களை வென்று சம்பியனாகியுள்ளது. இதில், ஆண்களுக்கான திறந்த பிரிவில் இலங்கை அணி மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றிருந்தது.

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 40 இற்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள ரன்சிலு ஜயதிலக்க, ஆண்களுக்கான 120 கிலோ கிராம் திறந்த பிரிவில் போட்டியிட்டு 2 தேசிய சாதனைகளுடன் தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக 720 கிலோ கிராம் எடையை தூக்கிய இவர், ஸ்குவட் முறையில் 290 கிலோ கிராம் மற்றும் டெட்லிஃப்ட் முறையில் 300 கிலோ கிராம் எடையை தூக்கி இரண்டு தேசிய சாதனைகளை பதிவுசெய்தார்.

இவருக்கு அடுத்தப்படியாக, 59 கிலோ கிராம் திறந்த பிரிவில் போட்டியிட்ட பிரதீப் குமார மொத்தமாக 550 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கம் வென்றார். இவர், ஸ்குவட் முறையில் 180, பென்ச் ப்ரெஸ் 105 மற்றும் டெட்லிஃப்ட் முறையில் 220 கிலோ கிராம் என எடைகளை துக்கியிருந்தார். அதேநேரம், 93 கிலோ கிராம் திறந்த பிரிவில் 600 கிலோ கிராம் என்ற ஒட்டுமொத்த எடையுடன் ஹிரான் பெர்னாண்டோ தங்கம் வென்றார். இவர், ஸ்குவட் முறையில் 240, பென்ச் ப்ரெஸ் 140 மற்றும் டெட்லிஃப்ட் முறையில் 220 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கம் வென்றிருந்தார்.  

இதேவேளை, இலங்கை பளுதூக்கல் அணியின் பயிற்றுவிப்பாளரான மோதிலால் ஜயதிலக்க 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில், 360 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கம் வென்றார்.  இவர் ஸ்குவட்டில் 100 கிலோ கிராம், பென்ச் ப்ரெஸில் 80 கிலோ கிராம் மற்றும் டெட்லிஃப்ட் முறையில் 180 கிலோ கிராம் எடைகளை தூக்கியிருந்தார்.

பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்

தென்னாபிரிக்காவில் கடந்த 17ஆம் திகதி ….

இலங்கையின் அனுபவ வீரர்களுடன் சென்றிருந்த இளம் வீரர்களும் இம்முறை பிரகாசித்திருந்தனர். இளம் வீரர்களின் மூலமாக இலங்கைக்கு 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் கிட்டியிருந்தது. 120+ இளையோர் எடைப் பிரிவில் போட்டியிட்ட நிவேந்திர சில்வா 435 கிலோ கிராம் எடையுடன் தங்கம் வென்றார். இவர் ஸ்குவட், பென்ச் ப்ரெஸ் மற்றும் டெட்லிஃப்ட் முறைகளில், முறையே 150, 115 மற்றும் 170 கிலோ கிராம் எடைகளை தூக்கியிருந்தார்.  

இளையோர் பிரிவின் 105 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட விகும் பெரேரா 515 கிலோ கிராம் ஒட்டுமொத்த எடையுடன் தங்கம் வென்றார். இவர் ஸ்குவட் 180, பென்ச் ப்ரெஸ் 110 மற்றும் டெட்லிஃப்ட் 225 என எடைகளை தூக்கியிருந்தார். இதேவேளை, இலங்கை அணிக்கான வெள்ளி பதக்கத்தினை 105 கிலோ கிரம் எடைப்பிரிவில் போட்டியிட்ட ககொல்ய ஜன்மோட் பெற்றுக்கொடுத்தார். இவர், ஸ்குவட் 180, பென்ச் ப்ரெஸ் 100 மற்றும் டெட்லிஃப்ட் 212 என ஒட்டுமொத்தமாக 492 கிலோ கிராம் எடையினை தூக்கியிருந்தார்.  

இதன்படி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற எக்யூப்ட் பிரிவு போட்டிகளில், மொத்தமான இலங்கை 8 தங்கம் மற்றும் 3 வெள்ளி என 11 பதக்கங்களை வென்றுள்ளது. அதேநேரம், இலங்கை பளுதூக்கல் அணி எதிர்வரும் 15, 16ம் திகதிகளில் நடைபெறவுள்ள க்ளெசிக் பிரிவு போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<