இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில், எபோனி ஹோலிடிங்ஸ் தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் Vantage FA கிண்ண கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றில் மோதும் அணிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுக்கான அணிகளை தெரிவு செய்யும் குலுக்கல் நிகழ்வு இன்று (29) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் உட்பட அதன் அதிகாரிகள், எபோனி ஹோல்டிங்ஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் இலங்கையின் முன்னணி கால்பந்து கழக அணிகளின் அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
“வன்டேஜ் எப்.ஏ கிண்ணம் 2019” நாளை ஆரம்பம்
இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த கால்பந்து தொடரான எப்.ஏ கிண்ணத்தின்…
கடந்த மார்ச் மாதம் ஆரம்பமாகிய இந்த வருடத்திற்கான Vantage FA கிண்ண தொடரின் ஆரம்ப கட்டமான லீக் மட்ட போட்டிகளும் அடுத்த கட்டமான மாவட்ட மட்டப் போட்டிகளும் நிறைவு பெற்றுள்ளன. எனினும், 64 அணிகள் சுற்று இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையிலேயே, தற்போது 32 அணிகள் சுற்றுக்கான குலுக்கல் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள், கடந்த முறை Vantage FA கிண்ண தொடரில் இறுதி 32 அணிகள் சுற்றுக்கு முன்னேறிய அணிகளுடன் மோதும் விதத்தில் இம்முறை 64 அணிகளுக்கான சுற்றுப் போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், 64 அணிகள் சுற்றில் மீதமுள்ள போட்டிகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிவரை நடைபெறும். அதேபோன்று, 32 அணிகள் சுற்றுக்கான போட்டிகள் டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதிவரை இடம்பெறும்.
தொடர்ந்து, தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றுக்கான போட்டிகள் அனைத்தும் ஜனவரி மாதம் 4ஆம், 5ஆம் திகதிகளிலும், காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் ஜனவரி மாதம் 11ஆம், 12ஆம் திகதிகளிலும் இடம்பெறும் அதேவேளை, அரையிறுதிப் போட்டிகள் ஜனவரி மாதம் 18ஆம், 19ஆம் திகதிகளில் இடம்பெறும். அரையிறுதி வரையிலான அனைத்து சுற்றுக்களுக்கும் குலுக்கல் இடம்பெறும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி மாதம் 24ஆம் திகதி இடம்பெறும்.
32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்
அணி 1 | அணி 2 |
786 வி.க / சிவில் பாதுகாப்பு வி.க | ஜமாலியா வி.க / விம்பில்டன் வி.க |
சோண்டர்ஸ் வி.க | மாவனல்லை யுனைடட் வி.க |
செரண்டிப் கா.க | சிறைச்சாலைகள் வி.க |
கண்டி நகரசபை வி.க / புளு ஸ்டார் வி.க | ரெட் ஸ்டார்ஸ் கா.க / கிறிஸ்டல் பெலஸ் கா.க |
விக்டரி வி.க / ரினௌன் வி.க | கொழும்பு கா.க |
சுபர் பீச் வி.க | ரெட் ரோஸ் வி.க / ரேன்ஜர்ஸ் வி.க |
சொலிட் வி.க | ஜாவா லேன் வி.க |
SLTB வி.க | இலங்கை பொலிஸ் வி.க |
கனகபுரம் வி.க / சரிகமுல்ல யூத் | லக்கி ஸ்டார் வி.க / புளு ஈகல்ஸ் வி.க |
எவரெடி வி.க / ரெட் ரொபின்ஸ் வி.க | நியு யங்ஸ் கா.க |
கோல்டன் ரைஸ் வி.க | டிபென்டர்ஸ் கா.க |
லிவர்பூல் வி.க | பாடும் மீன் வி.க / ஜுபிடர்ஸ் வி.க |
ரெட் சன் வி.க | நியு ப்ரென்ஸ் வி.க / புனித நிக்கீலர்ஸ் வி.க |
ஜெட் லைனர்ஸ் வி.க / நியூ ஸ்டார் வி.க | யங் ஸ்டார் வி.க |
அப் கன்ட்ரி லயன்ஸ் வி.க | மிடல்லெக்ஸ் / க்ரே்ட் ஸ்டார் |
ரட்னம் வி.க / சீஹோக்ஸ் கா.க | இமாயன் வி.க / நிகம்பு யூத் வி.க |
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<