தேசிய சாதனைகளுடன் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்

93

ஆசிய பசுபிக் க்ளெசிக் (Classic), எகியூப்ட் (Equipped) மற்றும் பென்ச் ப்ரெஸ் (Bench Press) சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டியின் மகளிர் பிரிவில் இலங்கை  நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்

தென்னாபிரிக்காவில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற..

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் ஆரம்பமாகிய இந்தப் போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று (12) மகளிருக்கான எகியூப்ட் (Equipped) பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில், பகிரங்க பிரிவுக்கான 63, 47 மற்றும் 72 கிலோ கிராம் எடைப்பிரிவுகளிலும், 84 கிலோகிரம் இளையோர் எடைப்பிரிவிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இதன் அடிப்படையில், 84 கிலோகிரம் இளையோர் எடைப்பிரிவில் போட்டியிட்ட ஷெஹானி கிரிஸ்டீன் மற்றும் 47 கிலோகிராம் எடைப்பிரில் போட்டியிட்ட டில்ருக்ஷி விக்ரமசிங்க ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றதுடன், 72 கிலோகிரம் எடைப்பிரிவில் போட்டியிட்ட மேரியன் டி சொய்ஸா 4 தேசிய சாதனைகளை பதிவுசெய்து வெள்ளிப்பதக்கத்தையும், 63 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட கயானி ரந்துனி வெள்ளிப்பதக்கதையும் வென்றுள்ளனர்.

  • 4 தேசிய சாதனைகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்ற மேரியன் டி சொய்ஸா

மகளிருக்கான எகியூப்ட் 72 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட மேரியன் டி சொய்ஸா 4 தேசிய சாதனைகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இவர், ஸ்குவட் முறையில் 125 கிலோகிராம், பென்ச் ப்ரெஸ் முறையில் 62 கிலோகிராம் மற்றும் டெட்லிஃப்ட் முறையில் 160 கிலோகிராம் எடையை தூக்கியுள்ளார். இந்த பதிவுகள் அனைத்தும் இலங்கையின் தேசிய சாதனைகளாக பதிவாகியதுடன், இவர், மொத்தமாக தூக்கிய 347 கிலோகிராம் எடையானது 72 கிலோகிராம் எடைப்பிரிவில் பெறப்பட்ட மற்றுமொரு இலங்கையின் தேசிய சாதனையாகவும் பதிவாகியது.

  • ஷெஹானி கிரிஸ்டீன் மற்றும் டில்ருக்ஷி விக்ரமசிங்க ஆகியோருக்கு தங்கம்

மகளிருக்கான எகியூப்ட் இளையோர் 84+ கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட ஷெஹானி கிரிஸ்டீன் மொத்தமாக 220 கிலோகிராம் எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இவர், ஸ்குவட் முறையில் 80 கிலோகிராம், பென்ச் ப்ரெஸ் முறையில் 40 கிலோகிராம் மற்றும் டெட்லிஃப்ட் முறையில் 100 கிலோகிராம் எடையையும் தூக்கியுள்ளார்.

தேசிய சாதனையுடன் பொதுநலவாய பளுதூக்கலில் இலங்கைக்கு இரு பதக்கங்கள்

பொதுநலவாய நாடுகளின் பளுதூக்கல் போட்டித்…

இதேவேளை, றக்பி வீராங்கனையான டில்ருக்ஷி விக்ரமசிங்க எகியூப்ட் 47 கிலோகிராம் எடைப்பிரிவில், மொத்தமாக 265 கிலோகிராம் எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இவர் ஸ்குவட்டில் 110 கிலோகிராம், பென்ச் ப்ரெஷில் 45 கிலோகிராம் மற்றும் டெட்லிஃப்ட் முறையில் 110 கிலோகிராம் எடையை தூக்கியுள்ளார்.

  • கயானி ரந்துனிக்கு வெள்ளிப்பதக்கம்

மகளிர் எகியூப்ட் 63 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட கயானி ரந்துனி  மொத்தமாக 285 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். இவர் ஸ்குவட்டில் 120 கிலோகிராம், பென்ச் ப்ரெஸ்சில் 45 கிலோகிராம் மற்றும் டெட்லிஃப்ட் முறையில் 120 கிலோகிராம் என்ற எடைகளை தூக்கி பதக்கத்தை வென்றுள்ளார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<