இலங்கை A அணியிலிருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் நீக்கம்!

220
Angelo Mathews

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியிலிருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் அனுபவ வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடியிருந்ததுடன், இரண்டாவது போட்டியில் அரைச்சதம் கடந்திருந்தார்.

>> இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு

இந்நிலையில் நியூசிலாந்து சுற்றுப் பயணத்துக்காக இலங்கை அணி தயாராகிவருகின்ற நிலையில், ரதெல்ல மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற பயிற்சி முகாமில் அஞ்செலோ மெதிவ்ஸ் இணைந்துகொண்டுள்ளார்.

இதன் காரணமாகவே மூன்றாவது போட்டிக்கான இலங்கை A குழாத்தில் மெதிவ்ஸ் இணைக்கப்படவில்லை. மெதிவ்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதும், அவருக்கு பதிலாக மேலதிக வீரர்களை இலங்கை A அணி பெயரிடவில்லை.

இரண்டாவது போட்டியில் விளையாடிய குழாத்திலிருந்து எந்தவித மாற்றங்களையும் இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொள்ளவில்லை. தேசிய அணி வீரர்களான நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பிரமோத் மதுசான் மற்றும் துனித் வெல்லாலகே போன்ற வீரர்கள் தொடர்ந்தும் A அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை (21) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை A குழாம்

அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, துனித் வெல்லாலகே, இசித விஜேசுந்தர, பிரமோத் மதுசான், துஷான் ஹேமன்த, அம்ஷி டி சில்வா, கவிஷ்க அஞ்சுல, லஹிரு உதார, நிபுன் தனன்ஜய, சுமிந்த லக்ஷான்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<