தாய்லாந்து மெய்வல்லுனர் தொடரிலிருந்து சண்முகேஸ்வரன் நீக்கம்

214

தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இவ்வார இறுதியில் ஆரம்பமாகவிருந்த தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் இழந்துள்ளார்.

முஸ்பிகுர், முஸ்தபிசூர் அபாரம்: இறுதிப் போட்டியில் பங்களாதேஷ்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டப்ளினில் …………

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் இம்முறை நடைபெறவுள்ள ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இதில் தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் தொடருக்காக அறிவிக்கப்பட்ட 8 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்த குமார் சண்முகேஸ்வரனை இறுதி நேரத்தில் அணியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.  

இதுதொடர்பில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் அதிகாரியொருவர் கருத்து வெளியிடுகையில், ”குறித்த போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டி ஏற்கனவே இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எனவே அதில் பங்குபற்றும் வாய்ப்யை நாங்கள் சண்முகேஸ்வரனுக்கு வழங்கியிருந்தோம். எனினும், குறித்த போட்டிக்காக வீரர்களின் பங்குபற்றல் குறைவாக இருப்பபதால் அதை நீக்கிக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினால் எமக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே நாங்கள் சண்முகேஸ்வரனை அணியிலிருந்து நீக்கினோம்” என தெரிவித்தார்.

இராணுவ அரை மரதன் ஓட்டத்தில் சம்பியனாகிய சண்முகேஸ்வரன்

இலங்கை இராணுவத்தினால் 54ஆவது தடவையாகவும் ………

கடந்த வருடம் நடைபெற்ற பெரும்பாலான தேசிய மட்ட நீண்ட தூர ஓட்டப் போட்டிகள் மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்ற கே. சண்முகேஸ்வரன், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்று தனது முதலாவது சர்வதேச வெற்றியைப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தாய்லந்தின் பெங்கொக் நகரில் உள்ள சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 7 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வீரர்களுக்கு இந்த தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாத்தில் இடம்பெற்றுள்ள லக்மால் குணரத்ன (ஆண்களுக்கான 400 மீற்றர்) மற்றும் ஷ்யாமா துலக்ஷி (பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல்) ஆகியோர் முதல்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடவுள்ளதுடன், ரொஷான் தம்மிக்க (110 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), அசங்க ரத்னசேன (400 மீற்றர் தடைதாண்டல்), சாரங்கி சில்வா (நீளம் பாய்தல்) மற்றும் லக்ஷிகா சுகன்தி (ஹெப்டெத்லன்) ஆகிய வீரர்களும் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நாட்டில் வன்முறை வேண்டாம்: கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் …………….

இதேவேளை, இரண்டு கட்டங்களைக் கொண்டதாக இம்முறை நடைபெறவுள்ள ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் சீனாவின் சொன்கிங்கில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்பாக 9 வீர, வீராங்கனைகளை பங்குபற்றச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இம்முறை ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான குண்டு எறிதல் தேசிய சம்பியனான தாரிக்கா குமுதுமாலி மற்றும் பெண்களுக்கான உயரம் பாய்தல் தேசிய சம்பியனான துலான்ஜலி ரணசிங்க ஆகிய இருவரும் மிக நீண்டவேளையின் பிறகு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேசப் போட்டியொன்றில் களமிறங்கவுள்ளனர்.

இதேநேரம், அண்மையில் கட்டாரில் நிறைவுக்கு வந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பிரகாசிக்கத் தவறிய நிமாலி லியானாரச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன (பெண்களுக்கான 800 மீற்றர்), சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), அஜித் பிரேமகுமார (400 மீற்றர்), ருசிறு சத்துரங்க (800 மீற்றர்), கிரேஷன் தனன்ஜய (முப்பாய்ச்சல்), நதீஷா ராமநாயக்க (400 மீற்றர்) ஆகியோருக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்குவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<