SLC அழைப்பு T20 தொடருக்கான அணிக்குழாம்கள் அறிவிப்பு!

SLC Invitational T20 League 2022

1580

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள SLC அழைப்பு T20 தொடருக்கான அணிக்குழாம்கள் மற்றும் போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் பிற்போடப்பட்டதை தொடர்ந்து, அடுத்து நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணம் மற்றும் T20I உலகக்கிண்ணத்துக்கான தயார்படுத்தல்களுக்காக இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் குழுவில் இணையும் விட்டோரி, லக்ஷ்மன்!

எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்த தொடரில் SLC ரெட்ஸ், SLC  புளூஸ், SLC  கிரீன்ஸ் மற்றும் SLC கிரேஸ் ஆகிய நான்கு அணிகள் விளையாடவுள்ளதுடன், ஒவ்வொரு அணிகளும் தலா ஒவ்வொரு முறை எதிரணிகளுடன் மோதும். தொடரின் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 16ம் திகதி நடைபெறவுள்ளதுடன், அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளன.

தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள நான்கு அணிகளில், ஒரு குழாத்துக்கு 15 வீரர்கள் என மொத்தமாக 60 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதில் SLC ரெட்ஸ் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், SLC புளூஸ் அணியின் தலைவராக சரித் அசலங்க, SLC கிரீன்ஸ் அணியின் தலைவராக தசுன் ஷானக மற்றும் SLC கிரேஸ் அணியின் தலைவராக அஷான் பிரியன்ஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாம்களில் முன்னணி வீரர்களான பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், துஷ்மந்த சமீர, தனுஷ்க குணதிலக்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதேநேரம், பல இளம் வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், உபாதையிலிருந்து மீண்டுவரும் குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் இந்த குழாம்களில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணிக்குழாம்கள்

SLC ரெட்ஸ்

லசித் குரூஸ்புள்ளே, குசல் மெண்டிஸ் (தலைவர்), பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, சஹான் ஆராச்சிகே, துனித் வெல்லாலகே, லஹிரு மதுசங்க, மதீஷ பதிரண, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பபசர வதுகே, கலன பெரேரா, கெவின் கொத்திகொட, சிதார கிம்ஹான்

SLC புளூஸ்

தனுஷ்க குணதிலக்க. சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க (தலைவர்), தனன்ஜய டி சில்வா, அஷேன் பண்டார, சாமிக்க கருணாரத்ன, சுமிந்த ல்கஷான், பிரமோத் மதுசான், லஹிரு குமார, பிரவீன் ஜயவிக்ரம, கசுன் ராஜித, லஹிரு உதார, லஹிரு சமரகோன், அஷேன் டேனியல், நிபுன் ரன்சிக

SLC கிரீன்ஸ்

பெதும் நிஸ்ஸங்க, நிரோஷன் டிக்வெல்ல, நுவனிந்து பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய லக்ஷான், ரமேஷ் மெண்டிஸ், பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன், சுமிந்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, நிமேஷ் விமுக்தி, சச்சிந்து கொலம்பகே

SLC கிரேஸ்

அஷான் ரந்திக, சங்கீத் குரே, அஷான் பிரியன்ஜன் (தலைவர்), பி.டி.எம். தபரே, மினோத் பானுக, மொவின் சுபாசிங்க, முதித லக்ஷான், அகில தனன்ஜய, துவிந்து திலகரட்ன, மிலான் ரத்நாயக்க, லக்ஷான் கமகே, நிம்ஷார அதரகல்ல, புலின தரங்க, தரிந்து ரத்நாயக்க, கசுன் விதுர அதிகாரி

போட்டி அட்டவணை

  • ஆகஸ்ட் 09 – SLC கிரேஸ் எதிர் SLC ரெட்ஸ்

SLC புளூஸ் எதிர் SLC கிரீன்ஸ்

  • ஆகஸ்ட் 11 – SLC கிரீன்ஸ் எதிர் SLC ரெட்ஸ்

SLC கிரேஸ் எதிர் SLC புளூஸ்

  • ஆகஸ்ட் 14 – SLC கிரேஸ் எதிர் SLC கிரீன்ஸ்

SLC புளூஸ் எதிர் SLC ரெட்ஸ்

  • ஆகஸ்ட் 16 – இறுதிப்போட்டி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<