ஐசிசி கிரிக்கெட் குழுவில் இணையும் விட்டோரி, லக்ஷ்மன்!

International Cricket Council

182

இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் விட்டோரி ஆகியோர் ஐசிசி கிரிக்கெட் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டேனியல் விட்டோரி மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆகியோர் தற்போது விளையாடும் வீரர்களுக்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

நல்ல முன்னிலையுடன் பலம் பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

டேனியல் விட்டோரி நியூசிலாந்து அணிக்காக 113 டெஸ்ட், 296 ஒருநாள் மற்றும் 20 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், வி.வி.எஸ். லக்ஷ்மன்  134 டெஸ்ட் மற்றும் 86 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இவர்களுக்கு ஐசிசி நியமனங்களை வழங்கியுள்ள அதேவேளை, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரான ரொஜர் ஹார்பர், முன்னாள் வீரர்களுக்கான பிரதிநிதியாக ஐசிசி கிரிக்கெட் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி கிரிக்கெட் குழுவின் முன்னாள் வீரர்களுக்கான பிரதநிதியாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன செயற்பட்டுவரும் நிலையில், இவருடன் இணைந்து ரொஜர் ஹார்பர் செயற்படவுள்ளார். ரொஜர் ஹார்பர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 25 டெஸ்ட் மற்றும் 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<