ரமித் ரம்புக்வெல்லவின் அதிரடி ஆட்டத்தினால் காலிறுதிக்கு நுழைந்த மாஸ் ஹோல்டிங்ஸ்

202
 

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 25ஆவது பிரீமியர் லீக் T20 நொக் அவுட் தொடரின் காலிறுதிக்கு முந்திய போட்டி இன்று (15) நடைபெற்றன.

சம்பத் வங்கி எதிர் மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செல்லா

ரமித் ரம்புக்வெல்லவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் சம்பத் வங்கியுடனான போட்டியை 8 விக்கெட்டுகளால் வென்ற மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செல்லா அணி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சம்பத் வங்கி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஹசந்த பெர்னாண்டோ அரைச்சதம் (53) ஒன்றைப் பெற்றார்.

பின்னர் 140 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய மாஸ் யுனிசெல்லா அணிக்காக அதிரடி வீரர் ரம்புக்வெல்ல பந்துகளை பவுண்டரி எல்லைக்கு செலுத்தி அந்த அணிக்கு இலகு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

அவர் ஆட்டமிழக்காது 31 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசினார்.

போட்டியின் சுருக்கம்

சம்பத் வங்கி – 139/8 (20) – ஹசந்த பெர்னாண்டோ 53, தினுக் விக்ரமநாயக்க 30, துமிந்து திலகரத்ன 2/22, இஷார அமரசிங்க 2/26, பர்வீஸ் மஹ்ரூப் 2/33

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிச்செல்லா – 140/2 (8.5) – ரமித் ரம்புக்வெல்ல 97*, பர்வீஸ் மஹ்ரூப் 29*

முடிவு மாஸ் ஹோல்டிங்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றி


கொமர்ஷியல் கிரெடிட் எதிர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்

கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணி குறைந்த ஓட்ட வெற்றி இலக்கை போராடி எட்டி காலிறுதிப் போட்டிக்கு முன்னெற்றம் கண்டது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியால் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட கொமர்ஷியல் கிரெடிட் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களையே பெற்றது. சனித டி மெல் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றார்.

இளையோர் ஆசிய கிண்ணத்தில் இலங்கை, இந்தியா வெளியேற்றம்

இளையோர் ஆசியக் கிண்ண போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை மற்றும் இந்திய…

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜோன் கில்ஸ் அணியும் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் வெற்றி இலக்கை எட்டுவதில் தடுமாற்றம் கண்டது. ஆனால் பானுக்க ராஜபக்ஷ 37 ஓட்டங்களை விளாசியதோடு விகும் சஞ்சய ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஜோன் கில்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

போட்டியின் சுருக்கம்  

கொமர்ஷியல் கிரெடிட் – 129/9 (20) – சனித டி மெல் 37, மலிந்த புஷ்பகுமார 24, சமிக்கர எதிரிசிங்க 2/28

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் – 130/8 (17) – பானுக்க ராஜபக்ஷ 37, விகும் சஞ்சய 27*, லஹிரு மலிந்த 20, மலிந்த புஷ்பகுமார 2/26, அசித பெர்னாண்டோ 2/42 

முடிவு ஜோன் கீல்ஸ் 2 விக்கெட்டுகளால் வெற்றி


கான்ரிச் பினான்ஸ் எதிர் டிமோ

மொரட்டுவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கான்ரிச் பினான்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வென்ற டிமோ காலிறுதிக்கு முன்னெற்றம் கண்டது.

நாணய சுழற்சியில் வென்ற டிமோ எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கான்ரிச் பினான்ஸ் 18.4 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 9 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய டிமோ அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. துடுப்பாட்டத்தில் திக்ஷில டி சில்வா 54 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

கான்ரிச் பினான்ஸ் – 101 (18.4) – விஷ்வ தீமந்த 29, ரமேஷ் மெண்டிஸ் 2/09, நிஷர தாரக்க 2/14, கவிஷ்க அஞ்சுல 2/24

டிமோ – 102/4 (14) – திக்ஷில டி சில்வா 54, ரவின் சயர் 2/11

முடிவு டிமோ அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி


ஹட்டன் நஷனல் வங்கி எதிர் ஹேய்லிஸ் PLC

ஹேய்லிஸ் அணி தனது அபார துடுப்பாட்டத்தின் மூலம் ஹட்டன் நஷனல் வங்கியை 9 விக்கெட்டுகளால் வென்று 25ஆவது சிங்கர் பிரீமியர் லீக் தொடரின் காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

மொரட்டுவ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஹட்டன் நஷனல் வங்கி 19.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சுருண்டது.

 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் வரலாறு படைக்குமா?

அண்மைய நாட்களில் அதிகமான தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட்…

ஹட்டன் நஷனல் வங்கி சார்பாக துடுப்பாட்டத்தில் மாதவ வர்ணபுர அரைச்சதம் பெற்றபோதும் லசித் அம்புல்தெனிய 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை விழ்த்தி நெருக்கடி கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய ஹேய்லிஸ் அணியில் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவிக்க அந்த அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 119 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

சச்சித்ர சேரசிங்க ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை விளாசியதோடு மறுபுறத்தில் ரொன் சந்திரகுப்தா 44 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

ஹட்டன் நஷனல் வங்கி – 115 (19.5) – மாதவ வர்ணபுர 51, நவிந்து நிர்மல் 29, பினுர பெர்னாண்டோ 2/14, லசித் அம்புல்தெனிய 4/17

ஹேய்லிஸ் PLC – 119/1 (14.2) – சச்சித்ர சேரசிங்க 52*, ரொன் சந்திரகுப்தா 44*, அன்டி சொலமன் 22

முடிவு ஹேய்லிஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

காலிறுதிப் போட்டிகள்

நவம்பர் 16 – முதலாவது காலிறுதிப் போட்டி – மாஸ் யுனிச்செல்லா எதிர் ஜோன் கீல்ஸ்

நவம்பர் 16 – இரண்டாவது காலிறுதிப் போட்டி – டிமோ எதிர் ஹேய்லிஸ்