உலகக் கிண்ணத்தில் சுழலில் மிரட்டக் காத்திருக்கும் நட்சத்திர வீரர்கள்

235

கிரிக்கெட் உலகின் அடுத்த வல்லரசு யார் என்பதை தீர்மானிக்கும் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில், பத்து நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்களும் தற்போது இங்கிலாந்தில் வெற்றிக் கிண்ணத்தை முத்தமிடும் போராட்டத்திற்கு முழுமையாகத் தயாராகியுள்ளனர்.

உலகக் கிண்ணத்தில் கலக்க காத்திருக்கும் சகலதுறை வீரர்கள்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள ……………..

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கிண்ணப் போட்டியில் வேகப் பந்துவீச்சைப் போல சுழல்பந்து வீச்சாளர்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் அங்கு நிலவும் உலர்ந்த ஆடுகளங்கள் மற்றும் வெப்பமான காலநிலை போன்ற காரணிகளால் சுழல் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, இம்முறை உலகக் கிண்ணத்தில் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கும் என நம்பப்படுகின்றது. அந்த அடிப்படையில் இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள 10 அணிகளில் மேற்கிந்திய திவுகளைத் தவிர ஏனைய அனைத்து அணிகளிலும் 14 சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் (இந்தியா), சதாப் கான் (பாகிஸ்தான்), அடெம் சம்பா (அவுஸ்திரேலியா), ஜீவன் மெண்டிஸ், ஜெப்ரி வெண்டர்சே (இலங்கை), ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், சமிஉல்லாஹ் சின்வாரி (ஆப்கானிஸ்தான்), சபிர் ரஹ்மான் (பங்களாதேஷ்), ஆதில் ரஷித் (இங்கிலாந்து), இஷ் சோதி (நியூசிலாந்து), இம்ரான் தாஹிர், தப்ரிஸ் ஷம்சி (தென்னாபிரிக்கா) உள்ளிட்ட வீரர்கள் இம்முறை உலகக் கிண்ணத்தில் சுழல் பந்துவீச்சில் மிரட்டுவதற்கு களமிறங்கவுள்ளனர்.

இதன்படி, இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக கருதப்படுகின்ற ஒருசில முன்னணி சுழல் பந்துவீச்சாளர்கள் தொடர்பில் இந்தக் கட்டுரை ஆய்வு செய்கின்றது.   

ஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)

ஆப்கானிஸ்தான் அணியின் முதுகெலும்பாகவும், கிரிக்கெட் உலகின் தற்போதைய தலைசிறந்த லெக் ஸ்பின்னராகவும் விளங்குகின்ற ஷீத் கான், கடந்த இரண்டு வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றார்.

சர்வதேச ஒருநாள் தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள ஷீத் கான், தற்போது சிறந்த போர்மில் உள்ள முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ஆவார். உலக அளவில் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சிக்கு இவரது பங்களிப்பு அளப்பெரியது. இவர் நிச்சயமாக எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருப்பார்.  

குறிப்பாக, தேவையான நேரத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அழுத்தம் கொடுப்பது, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்களைக் குவிப்பதை கட்டுப்படுத்துவது என ஷீத் கானுக்கு உரித்தான திறமைகள் இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இறுதியாக நடைபெற்ற .பி.எல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • ஒருநாள் போட்டி – 56
  • விக்கெட்டுகள் – 123
  • சராசரி – 3.91

குல்தீப் யாதவ் (இந்தியா)

உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியின் முக்கிய துருப்பு சீட்டுகளில் ஒன்றாக குல்தீப் யாதவ் இருப்பார் என கருதப்படுகிறது. கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள 24 வயதான குல்திப் யாதவ், சமீப காலங்களில் மிகப்பெரிய அளவில் போர்மில் இல்லை. அத்துடன், இம்முறை .பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஒன்பது போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே அவருக்கு எடுக்க முடிந்தது. இருப்பினும் இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என இந்திய தரப்பு நம்பியுள்ளது.

  • ஒருநாள் போட்டிகள் – 44
  • விக்கெட்டுகள் – 87
  • சராசரி – 4.94

இம்ரான் தாஹிர் (தென்னாபிரிக்கா)

உலகக் கிண்ணத்தை முதல்முறையாக கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு இம்ரான் தாஹிரின் பங்கு மிகப் பெரிய சாதகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இவரது கடைசி உலகக் கிண்ணத் தொடராகும். அணிக்கு விக்கெட் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் எடுத்து திரும்புமுனையை ஏற்படுத்தக் கூடியவர். மேலும், இவரது அனுபவம் அணிக்கு மேலும் பலம் சேர்க்கவுள்ளது.

40 வயதான தாஹிர், இதுவரை 98 ஒருநாள் போட்டிகளில் 162 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவர் அண்மையில் நிறைவுக்கு வந்த ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 17 போட்டிகளில் ஆடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை விழ்த்தியவர்களில் முதல் இடத்தைப் பிடித்து நல்ல போர்மில் உள்ளது தென்னாபிரிக்க அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என நம்பப்படுகின்றது.

  • ஒருநாள் போட்டிகள்  – 98
  • விக்கெட்டுகள் – 162
  • சராசரி – 4.63

>> “நாட்டு மக்கள் எமக்கு பக்கபலமாக உள்ளனர்”- குசல் மெண்டிஸ்

ஜீவன் மெண்டிஸ் (இலங்கை)

இலங்கை அணியின் அனுபவமிக்க சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான ஜீவன் மெண்டிஸ், இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளராகச் செயற்படவுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கைக்காக எந்தவொரு ஒருநாள் போட்டியிலும் விளையாடாத ஜீவன் மெண்டிஸ், அவ்வப்போது இலங்கை டி-20 அணிக்காக விளையாடியிருந்தார். அத்துடன், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற டி-20 தொடர்களிலும் தொடர்ந்து விளையாடி வந்தார்.

இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் தம்புள்ளை அணிக்காக விளையாடியிருந்த அவர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆஸி. வீரருக்கு பந்து வீசுவதற்கு பயிற்றுவித்த லசித் மாலிங்க

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (27) நடைபெற்ற உலகக் கிண்ண ………….

அத்துடன், கொழும்பு அணியுடனான லீக் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜீவன், மூன்றாவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டத்தில் 33 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தார்.

எனவே, ஒரு அனுபவமிக்க வீரராக ஜீவன் மெண்டிஸுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து ஆடுகளங்களில் அவருடைய பந்துவீச்சு எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

  • ஒருநாள் போட்டிகள் – 55
  • விக்கெட்டுகள் – 28
  • சராசரி – 5.08

சகீப் அல் ஹசன் (பங்களாதேஷ்)

தற்போது 32 வயதான சகீப் அல் ஹசன் இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியின் உப தலைவராக செயற்படவுள்ளார். பங்களாதேஷ் அணியின் சிரேஷ் வீரர்களில் ஒருவரான இவர், அண்மைக்காலமாக நடைபெற்ற அனைத்துவித போட்டிகளிலும் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அனுபவம் மிகுந்த பந்துவீச்சு எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பாக்கலாம். மத்திய ஒவர்களில் விக்கெட் எடுக்கும் திறமையும் அவரிடம் உண்டு. இருப்பினும், சகீப் சமீப காலங்களில் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  • ஒருநாள் போட்டிகள் – 198
  • விக்கெட்டுகள் – 249
  • சராசரி – 4.44

அடெம் சம்பா (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக முதல்நிலை சுழல் பந்துவீச்சாளராக விளையாடி வருகின்ற அடெம் சம்பா, இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகக் கிண்ண ஆரம்ப போட்டியிலேயே தென்னாபிரிக்காவுக்கு பாரிய இழப்பு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ………..

அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் பந்துவீச்சில் பிரகாசித்திருந்த அவர், அவுஸ்திரேலிய அணிக்கு தொடர் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தனது குக்ளி (Googly) பந்தினால் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்யும் திறன் படைத்த அடெம் சம்பா, தேவையான நேரத்தில் விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொடுக்கின்ற முக்கிய வீரராகவும் உள்ளார்.

  • ஒருநாள் போட்டிகள் – 44
  • விக்கெட்டுகள் – 60
  • சராசரி – 5.59

ஆதில் ஷீத் (இங்கிலாந்து)

துடுப்பாட்ட வீரர்களால் யூகிக்க முடியாத அளவிலான பந்துவீச்சைக் கையாளுக்கின்ற திறன் படைத்த 31 வயதான ஆதில் ஷீத், இங்கிலாந்து அணியின் அண்மைக்கால ஒருநாள் வெற்றிகளுக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய சுழல் பந்துவீச்சாளர் ஆவார். அந்த அணியின் முதல்நிலை சுழல் பந்துவீச்சாளராக விளங்குகின்ற அவர், இறுதிக்கட்ட ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதில் அபாரமாக செயற்பட்டு வருகின்றார். எனவே, இவருடைய அனுபவம் இம்முறை உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்கு பக்கபலமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.  

  • ஒருநாள் போட்டிகள் – 88
  • விக்கெட்டுகள் – 132
  • சராசரி – 5.61

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<