இலங்கை கிரிக்கெட் வரலாற்றை மாற்றி இன்றுடன் 24 வருடம்

0

மறைந்த டொனி க்ரைக் தொலைக்காட்சியில், “இலங்கை அணி விளையாட்டுத்துறையில் தங்களுடைய சிறந்த தருணத்தை அடைந்து வரலாறு படைப்பதற்கு இன்னும் ஒரு ஓட்டமே தேவை. இலங்கை ஒரு சிறிய நாடு. ஆனால், அவர்கள் நீண்ட தூரத்தை கடந்துள்ளனர்” என்று உலகிற்கு ஏக்க வார்த்தைகளை வெளியிடுகின்றார்.

இதேபோன்ற ஒருநாளில் தான் 1996ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி லாஹூரில் வைத்து முன்னணி அணிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தங்களுடைய முதல் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை.

கொரோனா பீதி: ஆசிய பதினொருவர் – உலக பதினொருவர் போட்டி ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்று…..

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முழு அங்கத்துவத்தை 1982ம் ஆண்டு பெற்ற இலங்கை அணி 14 ஆண்டுகளுக்கு பின்னர், கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. சுமார் ஒன்றரை தசாப்தமாக கடுமையான முயற்சிக்கு பின்னர், வரலாறு படைத்த இலங்கை அணி, வெற்றியிலக்கை எட்டி கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றதுடன், போட்டியை நடத்தாத நாடு ஒன்று முதன்முறையாக கிண்ணம் வென்ற பெற்ற பெருமையையும் பெற்றது.

இலங்கை அணி கிண்ணம் வென்ற 1996ம் ஆண்டு கிண்ணத்தை வெற்றிக்கொள்ளும் என அவுஸ்திரேலிய அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், மிகச்சிறந்த நுணுக்கங்களுடனும், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக்கொண்ட இலங்கை அணி தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, முதல் 15 ஓவர்களில் தங்களுடைய முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ரொமேஷ் களுவிதாரன மற்றும் சனத் ஜயசூரியவையும் இழந்திருந்த போதும், அரவிந்த டி சில்வா இலங்கை அணியினை மீட்டிருந்தமையை யாராலும் மறக்க முடியாது. அரையிறுதிப் போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்ததுடன், இவர் இறுதிப் போட்டியில் சதம் விளாசி அசத்தியிருந்தார். 

இலங்கை அணியின் துடுப்பாட்டமானது 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்பட்டிருந்தது. ஏழாம் இலக்க துடுப்பாட்ட வீரராக ரொஷான் மஹானாம இருக்க, 8ம் மற்றும் 9ம் இடங்களில் சமிந்த வாஸ் மற்றும் குமார் தர்மசேன ஆகியோர் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியிருந்தனர்.

பந்துவீச்சை பொருத்தவரை இலங்கை அணியின் பலம் குன்றியிருந்ததிருந்தாலும், அவர்களது களத்தடுப்பு ஓட்டங்களை கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய ஆயுதமாக இருந்திருந்தது. இலங்கை அணிக்கு சில கடினமான பிடியெடுப்பு வாய்ப்புகள் பெறப்பட்ட போதும், அதனை அணி மிகச்சிறப்பாக தங்கள் வசப்படுத்தியிருந்தது. இரண்டு உலகக் கிண்ணங்களை வென்றுக்கொடுத்திருந்த க்ளைவ் லொய்ட், “பிடியெடுப்புகள் ஆட்டத்தை வென்றுக்கொடுக்க கூடியவை” என்பதை அத்தருணத்தில் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி கொழும்பில் நடைபெறவிருந்த இரண்டு குழுநிலை போட்டிகளை பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி விளையாட மறுத்திருந்தன. உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், இலங்கையின் பொருளாதாரத்திலும் சறுக்கல் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த இரண்டு போட்டிகளையும் இலங்கை அணி இந்தியாவில் வைத்து விளையாட வேண்டும். இல்லையென்றால் புள்ளிகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், கிரிக்கெட் சபையின் அப்போதைய தலைவர் அனா புஞ்சிஹேவா மற்றும் மறைந்த அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் Fair-Play முறையில் இலங்கை அணிக்கு புள்ளிகளை பெற முடியும் என்பதை உறுதிப்படுத்தினர்.

கொரோனா காரணமாக MCC கிரிக்கெட் போட்டியும் இரத்து

கடந்த பருவகாலத்தில், இங்கிலாந்து……

அதேநேரம், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற அணிகளின் முகாமைத்துவ நிறுவனமாக செயற்பட்ட PILCOM நிறுவனமும் இதுதொடர்பில், கவனம் செலுத்தி இலங்கை அணிக்கு தங்களுடைய உதவிகளை வழங்கியிருந்தது.

உலகக் கிண்ணத்துக்கான காலப்பகுதியில் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட அணியாக இலங்கை அணி உருவாக்கப்பட்டிருந்தது. அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டிருந்ததுடன், வீரர்களுக்கான உடற்தகுதிக்கான பயிற்சிகள் அலெக்ஸ் கொண்டோரி மூலம் வழங்கப்பட்டிருந்தது. இவர்களுடன், இலங்கை அணியின் முதல் கிரிக்கெட் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் துலீப் மெண்டிஸ் அணியின் முகாமையாளராகவும், தேர்வுக்குழுத் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

இவ்வாறு, அனைவரினதும் ஒத்தழைப்புடனும், உழைப்புடனும் பெறப்பட்ட இந்த உலகக் கிண்ண வெற்றியானது காலங்கள் கடந்தும் இலங்கை ரசிகர்களின் மனதில் ஞாபகங்களாக தொடரும். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<