“நாட்டு மக்கள் எமக்கு பக்கபலமாக உள்ளனர்”- குசல் மெண்டிஸ்

491

இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டியில் இலங்கை அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி நேற்று (27) நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில், உஸ்மான் கவாஜாவின் 89 ஓட்டங்களால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முதல் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், இலங்கை அணி 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன், 87 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

ஆஸி. வீரருக்கு பந்து வீசுவதற்கு பயிற்றுவித்த லசித் மாலிங்க

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (27) நடைபெற்ற உலகக் கிண்ண பயிற்சிப்…

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 239/8  ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன், லஹிரு திரிமான்னே மாத்திரம் அரைச்சதம் கடந்து 56 ஓட்டங்களை பெற்றார். இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் துடுப்பாட்டம் மோசமாக இருந்த நிலையில் அணி தோல்விக்கு முகங்கொடுக்க நேரிட்டது. தற்போது இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சு இயந்திரத்தின் மூலம் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை. ஆடுகளத்தை பொருத்தவரை 300 ஓட்டங்களை பெறக்கூடிய நிலை இருந்தாலும், மத்திய ஓவர்களில் நாம் தடுமாறிய காரணத்தால் ஓட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அணியின் திட்டத்துக்கு ஏற்ப நாம் நகர்ந்திருந்த போதும், எதிரணியை கட்டுப்படுத்தக்கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெறத் தவறியமையே தோல்விக்கு காரணமாகியது.

எனினும், எம்மால் குறித்த தவறுகளை திருத்தி மாற்றத்தை கொண்டுவர முடியும் என நம்புகிறோம். குறிப்பாக முதல் போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் அணிக்கு உத்வேகம் கொடுக்கும் பட்சத்தில், அணி வீரர்கள் அனைவரும் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயற்படுவர்.

அதேநேரம், இங்குள்ள ஆடுகளங்கள் (இங்கிலாந்து) இலங்கையில் உள்ள ஆடுகளங்களை விட, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் சாதகமானது. அதிக வேகத்தை தரக்கூடியதாக உள்ளது. அதனால், நாம் சூழ்நிலைக்கு ஏற்ப இப்போது பந்துவீச்சு இயந்திரங்களைக் கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என்றார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களும் தங்களுடைய ஆரம்பத்தை பெற்றுக்கொண்டிருந்தனர். குறிப்பாக குசல் பெரேரா (12), மெதிவ்ஸ் (17), குசல் மெண்டிஸ் (24), ஜீவன் மெண்டிஸ் (21) மற்றும் திசர பெரேரா (27) ஆகியோர் ஆரம்பத்தை பெற்றிருந்தனர். எனினும், அவர்களால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தது. குறித்த காலப்பகுதியில் இடம்பெறவிருந்த இலங்கை அணியின் உலகக் கிண்ண பயிற்சி முகாமும் இடை நிறுத்தப்பட்டது. இந்த இன ரீதியான முரண்பாடுகள் இலங்கை கிரிக்கெட்டை எப்போதும் பாதிக்காது என குசல்  மெண்டிஸ் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இம்முறை உலகக் கிண்ணத்திலும் ஹட்ரிக் எடுக்க எதிர்பார்க்கும் லசித் மாலிங்க

வயது அதிகரித்துச் செல்கின்ற போதிலும், இலங்கையின் வேகப்பந்து நட்சத்திரமான…

“எமக்கு (இங்கிலாந்தில்) இங்கு சிறப்பான ஆதரவு வழங்கப்படுகின்றது. நான் ஒரு கத்தோலிக்க வீரர். எமது அணியில் சில பௌத்த வீரர்கள் உள்ளனர். சில இஸ்லாமிய வீரர்களும் இருக்கின்றனர். இலங்கையை பொருத்தவரை, அனைத்து இனங்களும் ஒன்றுதான். நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதுடன், உலகளாவிய ரீதியிலும் எமக்கு ஆதரவுகள் இருக்கின்றன.

அணியென்ற ரீதியில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதுடன், எமது நாட்டு மக்கள் எமக்கு பக்கபலமாக உள்ளனர். எனவே இந்த நேரமானது, நாம் செயல்படுவதற்கான நேரம்” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<