தலையில் பந்து தாக்கி ஓஜா வைத்தியசாலையில்

1183
Pragyan Ojha

கடந்த திங்கட்கிழமை தனது 30ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா இந்தியாவின் உள்ளூர் மட்டத்தில் நடைபெறும் துலிப் கிண்ண கிரிக்கட் போட்டியின் இந்தியா புளூ – இந்தியா கிரீன் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டு இருந்த வேளையில் தலையில் பந்து தாக்கி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் துலிப் கிண்ண கிரிக்கட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா புளூ – இந்தியா கிரீன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

நேற்றைய 4ஆவது மற்றும் இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய ப்ளூ அணியின் கடைசி நிலை துடுப்பாட்ட வீரர், பங்கஜ் சிங் ஜலாஜ் செக்சினா வீசிய பந்தை வேகமாக அடித்தார். அப்போது இந்தியா கீரின் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா “மிட் ஓன்” திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் வேகமாக வந்த பந்து அவரது தலையில் தாக்கியது.

வேகத்துடன் வந்து பந்து தலையில் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே மயக்கமடைந்தார். இதனால் வீரர்களிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரக்யான் ஓஜா தற்போது நலமாக இருப்பதாக இந்திய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கட்டில் இன்னும் கடுமையான போட்டி, சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என்ற நோக்கில், அணிகளை இரண்டு விதமாக வரிசைப்படுத்தி டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிந்துரை செய்தது. அதாவது தரவரிசையில் முதல் 7 இடங்களில் உள்ள முன்னணி அணிகள் ஒரு பட்டியலில் இடம் பெற்று டெஸ்ட் போட்டிகளில் மோத வேண்டும்.

இதே போல் தரவரிசையில் கடைசி 5 இடங்களில் உள்ள அணிகள் இன்னொரு பகுதியாக தங்களுக்குள் டெஸ்ட் விளையாட வேண்டும். பின்தங்கிய அணிகளில் உறுப்பு நாடுகள் அயர்லாந்து, ஆப்கானிஸ்தானும் சேர்க்கப்படும். பிறகு அணிகளின் செயற்பாட்டின் அடிப்படையில் ஒரு சில அணிகளை முதல் தரத்துக்கு கொண்டு செல்வதா? அல்லது தரம் இறக்குவதா? என்பது முடிவு செய்யப்படும்.

ஐ.சி.சி.யின் இந்த புதிய திட்டத்துக்கு இந்தியா பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. இலங்கை, சிம்பாப்வே, வங்காளதேச நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன.

இந்த நிலையில் துபாயில் நடந்த இரண்டு நாள் ஐ.சி.சி. செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்த பரிந்துரையை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.