கொரோனா வைரஸினால் ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி

96

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கழக கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (21) உயிரிழந்துள்ளார். 

சீனாவின் வூஹானில் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன

இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு ஸ்பெயினைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் பலியாகி உள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த 21 வயதான பிரான்சிஸ்கோ கார்சியா, அங்குள்ள அட்லெட்டிகோ போர்டாடா அல்டா கழகத்தின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கோவிட் 19” எனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்

அதிலும் குறிப்பாக, இவருக்கு லுகேமியா இருந்ததால் கெரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, தீவிர கெரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் அவர் மலாகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

21 வயதில் இவர் பலியாகியிருப்பது ஸ்பெயினில் இளம் வயதில் கெரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையை 5 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸுக்கு பலியான முதலாவது கால்பந்து வீரராக கார்சியா பதிவாகியுள்ளார்.  

சிறையிலும் கால்பந்து தொடரை வென்ற ரொனால்டினோ

பரகுவே சிறையில் இருக்கும் பிரேசில்……

இவர் ஏற்கனவே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், கார்சியாவின் திடீர் மறைவுக்கு அட்லெட்டிகோ போர்டாடா அல்டா கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமானது என்று அந்த கழகம் தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, ஸ்பெயினில் உள்ள மற்றொரு கால்பந்து கழகமான வலன்சியாவைச் சேர்ந்த கேரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா (21) கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<