இலங்கை U19 அணியின் ஆலோசகராகும் மஹேல?

192

இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயல்படுவதற்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் நீண்டகால அடிப்படையில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயல்பட மாட்டார் எனவும், ஒக்டோபர் மாதத்துக்குப் பின் குறுகிய கால அடிப்படையில் இலங்கை U19 அணியுடன் பணிபுரிவார் என அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கி செவ்வியில் அரவிந்த டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை U19 அணியை மிக முக்கிய அணியாக கருதுகிறோம். இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அடித்தளத்தை சரியாக இடவேண்டும்.

மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை இளையோர் அணி

எனவே, இதுதொடர்பில் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். அணிக்கு நல்ல பயிற்றுவிப்பாளர் ஒருவரை நியமித்து மஹேல ஜயவர்தன போன்ற ஒருவரை U19 அணியுடன் இணைந்து பணியாற்றச் செய்வதற்கு எதிர்பார்க்கிறோம்.

மஹேல ஜயவர்தன அக்டோபர் மாதத்துக்கு பின்னர் இலங்கை U19 அணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை U19 அணி இளையோர் உலகக் கிண்ணத்தை இதுவரை வெற்றி கொள்ளவில்லை.

இந்த நிலையில், இவ்வருட இறுதியில் U19 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மற்றும் இளையோர் உலகக் கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள நிலையில், மஹேல ஜயவர்தனவின் நியமனம் இலங்கை கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.

இலங்கை U19 பயிற்சி முகாமில் யாழ். வீரர்கள் இருவர்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக செயல்பட்டு வருகின்ற மஹேல ஜயவர்தன, தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக பணியாற்றி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…