தேசிய சாதனையுடன் தங்கம் வென்ற மெதிவ் அபேசிங்க

76

தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்றைய தினம் (6) நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் இலங்கை ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் அடங்கலாக 8 பதக்கங்களை வென்றுள்ளது.

முதலாவது தெற்காசிய நீர்சார் சம்பியன்சிப்பில் இந்தியா முதலிடம் : இலங்கைக்கு இரண்டாமிடம்

இலங்கை நீர்சார் வீளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக இடம்பெற்ற முதலாவது…

நேற்றைய தினம்  ஆண்களுக்கான 4x100M சாதாரண நீச்சல் (Freestyle) அஞ்சலோட்டம் உட்பட மூன்று தங்கங்களை வென்றிருந்த மெதிவ் அபேசிங்க இன்றைய தினம் தேசிய சாதனையுடன் ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இவர் இதற்கு முன்னர் வைத்திருந்த தனது 22.93 செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறியடித்து, 22.16 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து தங்கம் வென்றிருந்தார்.

இவரின் தங்கத்துடன், இலங்கை அணி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் தக்கவைத்திருந்தது. அகலங்க பீரிஸ் ஆண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டியில் 7 வருட தேசிய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதற்கு முன்னர் 02.03.94 நிமிடங்கள் என இருந்த போட்டி சாதனையை, இவர், 02.01.55 என்ற போட்டி நேரத்துடன் தகர்த்திருந்தார்.

அகலங்கவுக்கு அடுத்தப்படியாக டிலங்க செஹான் இன்றைய தினத்தின் முதல் பதக்கத்தை வென்றிருந்தார். இவர், ஆண்களுக்கான 1500 மீற்றர் சாதாரண நீச்சலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

>>Photos: Day 5 | South Asian Games 2019<<

இதேவேளை, இன்றைய தினம் இலங்கை அணி 5 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. ஆண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் கவிந்ர நுகேவெல (02.04.74), பெண்களுக்கான 200 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் கங்கா செனவிரத்ன (02.27.25), ஆண்களுக்கான 100 மீற்றர் ப்ரெஸ்ட்-ஸ்ட்ரொக் போட்டியில் கிரன் ஜாசிங்க (01.02.84), பெண்களுக்கான 100 மீற்றர் ப்ரெஸ்ட்-ஸ்ட்ரொக் போட்டியில் (01.15.27) ரமுதி சமரகோன் மற்றும் ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலில் அகலங்க பீரிஸ் (22.94) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வெற்றிக்கொண்டிருந்தனர்.

இலங்கை நீச்சல் அணி கடந்த இரண்டு நாட்களின் முடிவுகளில் படி 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<