T20 உலகக்கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

ICC Men’s T20 World Cup 2024

53

ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில்  இமாட் வசீம் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகிய அனுபவ வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 

ஆஸி. பயிற்சியாளர்கள் எவரையும் அணுகவில்லை – BCCI

பாபர் அஷாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இணைக்கப்பட்டுள்ள மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சல்மான் அலி ஆகா, ஹஸன் அலி மற்றும் மொஹமட் இர்பான் கான் ஆகிய வீரர்களே இவ்வாறு இறுதி குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹரிஸ் ரவூப், உபாதையிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். 

வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதுடன் ஹரிஸ் ரவூப், அபாஸ் அப்ரிடி, மொஹமட் ஆமிர், சஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

துடுப்பாட்டத்தை பொருத்தவரை அணித்தலைவர் பாபர் அஷாம், பக்ஹர் ஷமான், அஷாம் கான், உஸ்மான் கான், மொஹமட் ரிஸ்வான் போன்ற வீரர்களும், சகலதுறை வீரர்களாக சதாப் கான், இமாட் வசீம் மற்றும் இப்திகார் அஹமட் போன்ற வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் குழாம் 

பாபர் அஷாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், சயிம் ஆயுப், பக்ஹர் ஷமான், அஷாம் கான், உஸ்மான் கான், இப்திகார் அஹமட், இமாட் வசீம், சஹீன் ஷா அப்ரிடி, சதாப் கான், மொஹமட் ஆமிர், அபாஸ் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப், அப்ரர் அஹ்மட் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<