IPL இல் புதிய வரலாறு படைத்தார் விராத் கோஹ்லி

Indian Premier League - 2021

143
BCCI

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அரைச்சதம் விளாசியதன் மூலம் விராத் கோஹ்லி இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் 6,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

தேவ்தத் படிக்கலின் அபாரமான சதம், அணித் தலைவர் விராத் கோஹ்லியின் அரைச் சதம் ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடைபெற்ற IPL தொடரின் 16ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி கொண்டது.

IPL தொடரில் இருந்து விலகும் நிலையில் நடராஜன்

இதில் விராட் கோஹ்லி 47 பந்துகளில் 72 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 52 பந்துகளில் 101 ஓட்டங்களையும் குவித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்

அத்துடன், விராட் கோஹ்லி அரைச் சதம் அடித்ததன் மூலம் IPL தொடரில் 6,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். IPL தொடரில் முதல்முறையாக 4,000 மற்றும் 5,000 ஓட்டங்களைக் கடந்தவரும் கோஹ்லி தான். 

இதன்படி, IPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 6,021 ஓட்டங்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் 40 அரைச் சதங்கள், 5 சதங்கள் உள்ளடங்கும்

T20 போட்டிகளில் KL ராகுல் புதிய சாதனை

அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 5,448 ஓட்டங்களையும், 3ஆவது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ஓட்டங்களையும், 4ஆவது இடத்தில் டேவிட் வோர்னர் 5,384 ஓட்டங்களையும், 5ஆவது இடத்தில் ரோகித் சர்மா 5,368 ஓட்டங்களையும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.  

இதேவேளை,2008ஆம் ஆண்டு முதல் IPL தொடரில் விளையாடி வருகின்ற விராட் கோஹ்லி இதுவரை படைத்த சாதனைகளை இங்கு பார்க்கலாம்

IPL தொடரில் விராட் கோஹ்லி படைத்துள்ள சாதனைகள் 

6,021 ஓட்டங்கள்அதிக ஓட்டங்கள் குவித்த முதல் வீரர்

5 சதங்கள்அதிக சதம் விளாசியவர்களில் இரண்டாவது வீரர்

518 பௌண்டரிகள்அதிக பௌண்டரி அடித்த மூன்றாவது வீரர் 

40 அரைச் சதங்கள் அதிக அரைச் சதம் அடித்த மூன்றாவது வீரர்

204 சிக்ஸர்கள்அதிக சிக்ஸர் அடித்த ஐந்தாவது வீரர்  

196 போட்டிகள்அதிக போட்டிகளில் பங்கேற்ற ஐந்தாவது வீரர்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…