தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் அதிகாரம் பறிமுதல்

149
South Africa

தென்னாபிரிக்கா நாட்டின் விளையாட்டு ஒன்றியமும், ஒலிம்பிக் சங்கமும் அந்நாட்டு கிரிக்கெட் சபையை இடைநீக்கம் செய்து, அதன் கட்டுப்பாட்டையும் கையகப்படுத்தியுள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையில் பணிபுரிகின்ற முக்கிய உறுப்பினர்ளுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமை இதற்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையானது கிரிக்கெட் விளையாட்டில் ஒரு நாட்டின் அரசாங்கம் தலையிடுவதை தடுப்பதற்கான .சி.சி இன் சட்டவிதிமுறைகளை மீறுகின்ற ஒரு செயலாக உறுதியாகியுள்ளது.

>> இலங்கை டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் தற்காலிக குழாம் அறிவிப்பு

எனவே, தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களை அந்நாட்டு அரசாங்கம் கைப்பற்றினால், .சி.சிஇன் உறுப்புரிமையை தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை இழக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதுதொடர்பில் க்ரிக்பஸ் வெளியிட்டிருந்த செய்தியின் படி, தென்னாபிரிக்காவின் விளையாட்டு ஒன்றியம் மற்றும் அந்நாட்டு ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இணைந்து அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மற்றும் நிறைவேற்றுக் குழுவைச் சேர்ந்த சிரேஷ் அதிகாரிகள் அனைவரையும் சம்பளம் முழுவதையும் பெற்றுக் கொள்ளாமல் தத்தமது பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதிலும் குறிப்பாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டு கிரிக்கெட் சபையில் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் மோசமான மற்றும் பொறுப்பற்ற நிர்வாகம், அதில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் ஒரு மாதத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகள் முடியும் வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> Watch – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

இது உங்களது உறுப்பினர்கள், தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், அனுசரணையாளர்கள மற்றும் கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கின்ற பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது

அத்துடன், இந்த நடவடிக்கையானது பொதுமக்கள், அங்கத்தர்வர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வீரர்களுக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் இருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கும் காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன்மூலம் கிரிக்கெட் விளையாட்டின் நன்மதிப்பும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்காக அதிக காலங்கள் எடுத்துக் கொண்டதாகவும், தென்னாபிரிக்கா விளையாட்டு ஒன்றியமும், அந்நாட்டு ஒலிம்பிக் சங்கமும் குற்றம் சுமத்தியுள்ளது.

>> நான்காவது முறையாக CPL தொடரின் சம்பியனான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ்

முன்னதாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையுடன் மூன்று தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்கு தென்னாபிரிக்கா விளையாட்டு ஒன்றியமும், அந்நாட்டு ஒலிம்பிக் சங்கமும் முயற்சி செய்துள்ளது. இதன்போது பேசப்பட்ட ஒரு தலைப்பு மாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியில், நீதிமன்றத்துக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்க தென்னாபிரிக்கா விளையாட்டு ஒன்றியம் மற்றும் அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்திடம் அந்நாட்டு கிரிக்கெட் சபை வாக்குறுதி அளித்துள்ளது

ஆனால், அவர்கள் அந்த வாக்குறதியை நிறைவேற்றத் தவறியதால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது.

அதுமாத்திரமின்றி, குறித்த அறிக்கையில் ஒருசில விடயங்களை மாத்திரம் குறிப்பிட்டு தென்னாபிரிக்கா விளையாட்டு ஒன்றியம் மற்றும் அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் கையளிக்கப்பட்டுள்ளது

எனவே, அறிக்கையின் உண்மைத் தன்மை, அதன் உள்ளடக்கம் என்பவற்றை சரிவர பூர்த்தி செய்யவில்லை என குறிப்பிட்டு தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது

>> நியூசிலாந்து சுற்றுப் பயணத்துக்குத் தயாராகும் பாகிஸ்தான் அணி

தென்னாபிரிக்கா விளையாட்டு ஒன்றியமும், தென்னாபிரிக்கா ஒலிம்பிக் சங்கமும்  அரசாங்கம் மற்றும் விளையாட்டு சம்மேளனங்களை நிர்வகிக்கின்ற காரணத்தால் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது

இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிறகு இந்த தீர்மானமானது வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எதுஎவ்வாறாயினும், தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையோ அல்லது .சி.சியோ இதுதொடர்பில் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<