நியூசிலாந்து சுற்றுப் பயணத்துக்குத் தயாராகும் பாகிஸ்தான் அணி

229
PCB Plans Comprehensive Tour of New Zealand

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20i உள்ளிட்ட மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட திட்டமிட்டுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது

கொரோனாவின் பின் மீண்டும் ஆரம்பமாகும் பாகிஸ்தான் சுப்பர் லீக்

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, போட்டி ஆரம்பமாவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டது.  

அதன்பிறகு, அந்த அணி வீரர்கள் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் தக்கவைக்கப்பட்டதுடன், சிறப்பான முறையில் தொடரை முடித்து நாடு திரும்பியது

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் அணி மற்றும் பாகிஸ்தான்அணிகளை நியூசிலாந்து அனுப்புவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் எனவும், அதன்பிறகு உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் அந்த அணி வீரர்கள் சென்று போட்டியில் கலந்து கொள்வார்கள் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நியூசிலாந்து தொடருக்காக சுமார் 40 முதல் 45 வீரர்களை அழைத்துச் செல்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது

இதனிடையே, பாகிஸ்தான் அணி இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இருந்தது. இதில் ஒருநாள் தொடரை 5 – 0 எனவும், T20i தொடரை 2 – 1 எனவும் பாகிஸ்தான் அணி இழந்தது.

Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

இதுஇவ்வாறிருக்க, முன்னணி வீரர்கள் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றால் பாகிஸ்தானில் நடைபெறும் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படும் என்ற விமர்சனமும் தற்போது எழும்பியுள்ளது.

குறிப்பாக, கொவிட் – 19 வைரஸ் காரணமாக தடைப்பட்ட குவைட்அஸாம் கிண்ணத் தொடர், ஆறு அணிகள் பங்கேற்கும் மாகாண மட்ட உள்ளூர் தொடர் மற்றும் தேசிய ஒருநாள் தொடர் உள்ளிட்ட போட்டிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள ஜிம்பாப்வே அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து இந்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பாகிஸ்தான் வரவுள்ள ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் T20I போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<