தென்னாபிரிக்கா அணி இலங்கையை வந்தடைந்தது

South Africa Tour Of Sri Lanka - 2021

209
Sri Lanka Cricket
 

ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி, இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

டோஹாவிலிருந்து, கட்டார் விமானசேவைக்கு சொந்தமான QR 668 என்ற விமானத்தின் மூலம், இன்று அதிகாலை 2.15 மணியளவில் தென்னாபிரிக்கா அணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த தென்னாபிரிக்க அணியினர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று தென்னாபிரிக்க அணியினரை வரவேற்றுள்ளனர்.

தென்னாபிரிக்க தொடருக்கான 30 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

இதனிடையே, இலங்கை தொடருக்காக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணியில் குயிண்டன் டி கொக், லுங்கி என்கிடி மற்றும் டேவிட் மில்லர் ஆகிய வீரர்கள் இடம்பெறவில்லை.

அதேபோல, இலங்கைக்கு புறப்பட முன் கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜுனியர் டலா மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சார்ல் லெங்வெல்ட் ஆகிய இருவரும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிக் கொண்டனர்.

இதுஇவ்வாறிருக்க, தென்னாபிரிக்கா அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் ஈனோ கிங்க்வே தனது பதவியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இராஜினாமா செய்ததால் இலங்கை தொடரில் அவர் இடம்பெறவில்லை

இந்த நிலையில், நாட்டை வந்தரடைந்த தென்னாபிரிக்கா அணியினர் இலங்கை அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

பிசிஆர் முடிவுகளின் படி எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் தென்னாபிரிக்க அணிக்கு நாளை முதல் பயிற்சிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photos : South Africa Cricket Team arrives in Sri Lanka 2021

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…