லஹிரு திரிமான்னவின் துடுப்பாட்டத்தால் ஹேலீஸ் அடுத்தடுத்து வெற்றி

835

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர் லீக் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் துடுப்பாட்டத்தில் சோபித்த லஹிரு திரிமான்ன, மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா அணிக்கு எதிரான போட்டியிலும் ஹேலீஸ் அணி வெற்றிபெற உதவினார்.

வர்த்தக நிறுவனங்களின் பிரீமியர் லீக்கில் சதீர, திரிமான்ன அபார சதம்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26ஆவது சிங்கர் பிரீமியர்…

கட்டுநாயக்க, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் இன்று (17) நடைபெற்ற போட்டியில் திரிமான்ன சிறப்பாக ஆடி 80 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் எதிரணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயித்த ஹேலீஸ், எதிரணியை குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.

இலங்கை அணியில் இடம்பெற போராடி வரும் திரிமான்ன நேற்று (16) நடைபெற்ற டீஜே லங்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 109 ஓட்டங்களை பெற்று ஹேலீஸ் அணி தொடரில் முதல் வெற்றியை பெற உதவினார்.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஹேலீஸ் PLC அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது. திரிமான்ன தவிர, அவிஷ்க பெர்னாண்டோ (59) அரைச்சதம் ஒன்றை பெற்றார்.

யுனிசெல்லா அணி சார்பில் தம்மிக்க பிரசாத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இலங்கை அணியின் முன்னாள் வீரர் டி.எம். டில்ஷான் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இமாலய ஓட்டங்களுடன் ஆரம்பமான வர்த்தக நிறுவனங்களின் பிரீமியர் லீக்

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான 26 ஆவது சிங்கர் பிரீமியர்…

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய மாஸ் ஹோல்டிங்ஸ்-யுனிசெல்லா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. திலகரத்ன சம்பத் சிறப்பாக ஆடியபோதும் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டில்ஷானினால் 22 ஓட்டங்களையே பெற முடிந்தது. கடைசி நேரத்தில் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூப் போராடியபோதும் அவரால் 27 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இந்நிலையில் யுனிசெல்லா அணி 39.4 ஓவர்களில் 203 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஹேலீஸ் அணி சார்பில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் லசித் அம்புல்தெனிய மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஹேலீஸ் PLC – 267 (48.2) – லஹிரு திரிமான்ன 80, அவிஷ்க பெர்னாண்டோ 59, மதுரங்க சொய்சா 24, நிமேஷ் குணசிங்க 20, தம்மிக்க பிரசாத் 4/50, டீ.எம். டில்ஷான் 2/45

மாஸ் ஹோல்டிங்ஸ் – யுனிசெல்லா 203 (39.4) – டீ.எம். சம்பத் 68, பர்வீஸ் மஹ்ரூப் 27, டீ.எம். டில்ஷான் 22, பிரபாத் ஜயசூரிய 3/32, லசித் அம்புல்தெனிய 3/35, அண்டி சொலமன் 2/48

முடிவு – ஹேலீஸ் 64 ஓட்டங்களால் வெற்றி