செய்த தவறுகளை திருத்த எதிர்பார்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

160
EOIN MORGAN

கடந்த பருவகாலத்தில் செய்த தவறுகளை திருத்தி இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் (IPL) 2021ஆம் ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தினை பெற்றுக்கொள்வதற்கான எதிர்பார்ப்புக்களுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருக்கின்றது.

>> டேவிட் வோர்னரின் தலைமையில் சாதிக்குமா சன்ரைஸர்ஸ் ஹைதரபாத்

IPL தொடரினுடைய கடந்த பருவகாலத்தின் இடைநடுவில் அணித்தலைவர் மாற்றம், அன்ட்ரூ ரசல் போன்ற முன்னணி வீரர்களின் மோசமான ஆட்டம் என பல்வேறு இடங்களில் சிதைவுக்கு உள்ளாகிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு இயன் மோர்கனின் தலைமையில் அதிஷ்டத்தை எதிர்பார்த்து களமிறங்குகின்றது.

பலம்

இந்த ஆண்டுக்கான தொடரில் தமது திருப்புமுனை வீரர்களான அன்ட்ரூ ரசல் மற்றும் சுனில் நரைன் ஆகியோரிடமிருந்து திருப்தியான ஆட்டத்தினை எதிர்பார்க்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு, சகீப் அல் ஹசன் மற்றும் பென் கட்டிங் போன்ற வீரர்களின் சேர்க்கை பெறுமதியினை உருவாக்கும் என நம்பப்படுகின்றது. 

அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் நிறைந்த துடுப்பாட்டக் குழாம் ஒவ்வொரு பருவகாலத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கான சாதக நிலைமைகளை உருவாக்குகின்றது. அது இந்தப் பருவகாலத்திற்கான தொடரிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

>> இலங்கை தேசிய அணியுடன் மோதும் லெஜண்ட்ஸ் அணி ;  திகதி அறிவிப்பு

அணித்தெரிவு 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இந்தப் பருவகாலத்திற்கான தமது அணியில் அனுபவ சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங்கினை கொள்வனவு செய்திருப்பதோடு, அவரோடு  சேர்த்து கொள்வனவு செய்யப்ட்ட புதிய உள்ளடக்கமான இளம் சகலதுறைவீரர் வெங்கடேஷ் ஐயரும் இம்முறை அவ்வணிக்கு பலம் சேர்க்கின்றார். 

இந்த வீரர்கள் தவிர சுப்மன் கில், தினேஷ் கார்திக், அணித்தலைவர் இயன் மோர்கன், அன்ட்ரூ ரசல் போன்ற வீரர்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பிரதான பதினொருவர் அணியில் இடம்பெறும் முக்கிய வீரர்களாக இருப்பர் என்பதோடு, நியூசிலாந்தின் லொக்கி பெர்குஸனும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு முதன்மையானவராக இருப்பார் என கருதப்படுகின்றது. 

முழுமையான அணிக்குழாம்

இயன் மோர்கன் (அணித்தலைவர்), தினேஷ் கார்திக், சுப்மன் கில், நிதிஷ் ரானா, டிம் செய்பர்ட், ரிங்கு சிங், அன்ட்ரே ரசல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், சிவம் மாவி, லொக்கி பெர்குஸன், பெட் கம்மின்ஸ், கம்லேஷ் நகர்கோட்டி, சன்தீப் வாரியர், ப்ரசித் கிரிஷ்னா, றாகுல் த்ரிபத்தி, வருண் சக்கரவர்த்தி, சகீப் அல் ஹசன், செல்டன் ஜக்ஷன், வைபவ் அரோரா, ஹர்பஜன் சிங், கருண் நாயர், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயர், பவன் நேகி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<