பிரீமியர் லீக் தொடரில் முதல் வெற்றியை ருசித்த சிலாபம் மேரியன்ஸ்

25

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடத்தும் பிரீமியர் லீக் தொடரின் ஐந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நிறைவடைந்தன. இதில் சிலாபம் மேரியன்ஸ் இம்முறை தொடரில் முதல் வெற்றியை பெற்றதோடு மூன்று நாட்கள் கொண்ட இந்தப் போட்டிகளின் எஞ்சிய ஆட்டங்கள் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தன.

சிலாபம் மேரியன்ஸ் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

சுழல் பந்து ஜோடியான நிமேஷ் விமுக்தி மற்றும் சாகர் உதேசியின் மிரட்டும் பந்துவீச்சு மூலம் சோனகர் விளையாட்டுக் கழகத்தை இன்னிங்ஸ் மற்றும் 95 ஓட்டங்களால் வென்ற சிலாபம் மேரியன்ஸ் 2018/19 பருவத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துகொண்டது.

ரமேஷ், ரவிந்து ஆகியோரின் சதங்களால் வலுப்பெற்ற துறைமுக அதிகார சபை

சிலாபம் மேரியன்சின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்த இரு சுழல் பந்து வீச்சாளர்களும் இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மூன்றாவது நாள் ஆட்டத்தில் சோனகர் விளையாட்டுக் கழகம் மொத்தம் 18 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி 207 ஓட்டங்களுக்கு சுருண்டு பலே ஓன் (follow on) செய்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 428 (98.2) – ஓஷத பெர்னாண்டோ 147, தரிந்து கௌஷால் 5/118

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 207 (76.2) – பபசர வாதுகே 72, ஈரோஷ் சமரசூரிய 61, சாகர் உதேஷி 6/87, நிமேஷ் விமுக்தி 2/36

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O –126 (43) – ரமேஷ் மெண்டிஸ் 54, இரோஷ் சமரசூரிய 32, நிமேஷ் விமுக்தி 6/46, சாகர் உதேஷி 3/39

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் இன்னிங்ஸ் மற்றும் 95 ஓட்டங்களால் வெற்றி


BRC எதிர் சரெசன்ஸ் விளையாட்டுக் கழகம்

BRC முதல் இன்னிங்ஸில் பெற்ற 453 ஓட்டங்களுக்கு பதிலடியாக சரெசன்ஸ் அணியும் முதல் இன்னிங்சுக்காக 440 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

Photos: Ragama CC Vs. SLPA SC | Major League Tier A Tournament 2018/19

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் BRC அணிக்காக ருமேஷ் புத்திக்க சதம் பெற்றதோடு சரெசன்ஸ் அணி சார்பில் அனுபவ வீரர் மிலிந்த சிறிவர்தன சதம் குவித்தார். அஷேன் பண்டார 8 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார்.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 453/8d (104.4) – ருமேஷ் புத்திக்க 119, டேஷான் டயஸ் 98, பானுக ராஜபக்ஷ 86, டி.என் சம்பத் 64

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 440/9 (154) – மிலிந்த சிறிவர்தன 102, அஷேன் பண்டார 92*, பிரமோத் மதுவந்த 76, சாலிய ஜீவந்த 59, மொஹமட் ஷிராஸ் 4/245, ஹஷேன் ராமனாயக்க 3/60

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

சங்கீத் குரேயின் சிறப்பான சதத்தின் மூலம் கோல்ட்ஸ் அணி நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு நெருக்கடி கொடுத்தபோதும் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனால் கோல்ட்ஸ் அணி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் ஆறுதல் அடையவேண்டி ஏற்பட்டது.

சதம் கடந்த டினோசன், சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு மற்றுமொரு இன்னிங்ஸ் வெற்றி

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோல்ட்ஸ் அணி 289 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் இறுதி நாள் ஆட்ட நேர முடிவின்போது 168 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 243 (69.4) – அவிஷ்க பெர்னாண்டோ 101, விசாட் ரந்திக்க 40, உபுல் இந்திரசிறி 4/85

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 230 (76.1) – ஷெஹான் திலசிறி 57, ரொஹான் சஞ்சய 5/80

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 275/6d  (72) – சங்கீத் குரே 112*, அவிஷ்க பெர்னாண்டோ 75, ஷெஹான் ஜயசூரிய 3/78

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 168/7 (29) – ஷெஹான் ஜயசூரிய 45, டிலசிறி லொகுபண்டார 38, சஹன் ஆரச்சிகே 33, நிசல தாரக்க 3/35

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் SSC

SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்ததால் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றபோதும் SSC அணி தீர்க்கமான முதல் இன்னிங்ஸ் புள்ளிகளை தட்டிச் சென்றது.

சுப்ரமணியம் ஆனந்தின் சதத்தின் உதவியோடு பதுரெலிய முதல் இன்னிங்ஸில் 372 ஓட்டங்களை பெற்றபோதும் SSC தனது முதல் இன்னிங்ஸில் 429 ஓட்டங்களை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 372 (95.5) – சுப்ரமணியம் ஆனந்த் 127, தெனுவன் ராஜகருணா 58, சச்சித்ர சேனநாயக்க 5/94

SSC (முதல் இன்னிங்ஸ்) – 429 (101.4) – ஆகாஷ் சேனாரத்ன 90, கிரிஷான் ஆராச்சிகே 70, சதுன் வீரக்கொடி 46, சச்சித் பதிரன 4/146, புத்திக்க சஞ்சீவ 3/237

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 222/4 (49) – சாலிந்த உஷான் 79, நதீர நாவல 61, அலங்கார அசங்க 22

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற இமாலய ஓட்டங்களின் உதவியோடு முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

சகீப் அல் ஹசன், கார்லோஸ் பரத்வெயிட் ஆகியோருக்கு இரட்டிப்பு அபராதம்

றாகம அணி 177 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து கடைசி நாள் ஆட்டத்தை ஆரம்பித்தபோதும் அந்த அணி 291 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து பின்னடைவை சந்தித்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 427/9d (138) – ரமேஷ் நிமன்த 120, ரவிந்து குணசேகர 105, கயான் மனீஷன் 60, அமில அபொன்சோ 3/107, நிசான் பீரிஸ் 4/137

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 291 (78.5) – தினெத் தமோத்ய 104, சமிந்த பெர்னாண்டோ 52, சானக்க கோமசரு 4/90, ரனேஷ் பெரேரா 3/41

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 202/5d (46) – ரமேஷ் நிமன்த 60, அதீஷ நாணயக்கார 55, நிஷான் பீரிஸ் 3/58

றாகம கிரிக்கெட் கழகம் (இரண்டாது இன்னிங்ஸ்) – 11/1 (1.4)

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<